Home செய்திகள் இந்தியாவை மதவாத நாடாக மாற்ற முயற்சி – கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன்

இந்தியாவை மதவாத நாடாக மாற்ற முயற்சி – கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன்

0
இந்தியாவை மதவாத நாடாக மாற்ற முயற்சி – கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன்
The Wayanad landslide should be declared a national calamity - Kerala Chief Minister Pinarayi Vijayan's request

இந்தியாவை மதவாத நாடாக மாற்ற முயற்சி – கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன்

trying to make india a secular state – kerala chief minister pinarayi vijayan

  • இந்தியாவில் மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படாது.

  • (குடியுரிமை திருத்த சட்டம்) இங்கு அமல்படுத்த மாட்டோம் என்று கேரளா உடனடியாக அறிவித்தது

திருவனந்தபுரம் , மே. 31

நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவின் போது நடந்த நிகழ்வுகள் இந்தியாவை மதவாத நாடாக மாற்றும் முயற்சியின் வெளிப்பாடு என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாம் அனைவரும் இந்திய குடிமக்கள். மதத்தின் அடிப்படையில் நமக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை. ஏனெனில் இந்தியாவில் மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படாது. ஆனால், நம் நாட்டில் குடியுரிமை திருத்த சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள் : பள்ளி சீருடையில் வரும் மாணவர்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம் – போக்குவரத்துத்துறை

தற்போது அனைத்து கொள்கைகளையும் தூக்கி எறிந்து, ஒருவரின் மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்பட்டது என்பதை நிறுவுவதற்காகத்தான் திருத்தம் செய்யப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.

அதை (குடியுரிமை திருத்த சட்டம்) இங்கு அமல்படுத்த மாட்டோம் என்று கேரளா உடனடியாக அறிவித்தது. நாங்கள் இன்னும் அதில் உறுதியாக நிற்கிறோம்.

மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கு எதிராக கேரளா எப்போதும் உறுதியாக உள்ளது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.