Wednesday, December 18, 2024

உக்ரைனில் மருத்துவ மாணவர்கள் எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு தேர்வினை எழுத இந்தியாவில் ஒருமுறை வாய்ப்பு

 

உக்ரைனில் மருத்துவ மாணவர்கள் எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு தேர்வினை எழுத இந்தியாவில் ஒருமுறை வாய்ப்பு

ukraine medical students can write mbbs final exam once in india

 

  • மாணவர்கள் இந்திய மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து தங்கள் படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக அவர்கள் தரப்பில் உச்சநீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது

  • எழுத்து தேர்வு, இந்திய எம்.பி.பி.எஸ். பாடத்திட்டத்தின்படி நடைபெறும். பயிற்சி, குறிப்பிட்ட சில அரசு மருத்துவக்கல்லூரிகளில் மட்டுமே அனுமதிக்கப்படும். இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறுகிற மாணவர்கள் 2 ஆண்டு கட்டாய சுழற்சி முறையிலான பயிற்சி பெற வேண்டும்.

 

புதுடெல்லி, மார்ச்.29

உக்ரைனில் எம்.பி.பி.எஸ். மருத்துவ பட்டப்படிப்பு படித்து வந்த சுமார் 18 ஆயிரம் இந்திய மாணவர்கள், போர் காரணமாக பாதியிலேயே நாடு திரும்பினர். அவர்கள் உக்ரைனுக்கு திரும்பிச்சென்று தங்களது மருத்துவ படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

உக்ரைனில் மருத்துவ மாணவர்கள் 

இந்த மாணவர்கள் இந்திய மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து தங்கள் படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக அவர்கள் தரப்பில் உச்சநீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்கள் எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு தேர்வினை எழுத இந்தியாவில் ஒருமுறை வாய்ப்பு தரப்படும் என உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்குரூப்-4 தேர்வு முடிவு முறைகேடு குற்றச்சாட்டுக்கு டி.என்.பி.எஸ்.சி. முற்றுப்புள்ளி வைக்குமா ? 

ஒரு முறை வாய்ப்பு

இது தொடர்பான முக்கிய தகவல்கள் வருமாறு:- எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு தேர்வில் பகுதி 1 மற்றும் பகுதி 2 (எழுத்து தேர்வு, செய்முறைத் தேர்வு) ஆகியவற்றை மேற்கொள்ள ஒரு முறை வாய்ப்பு தரப்படும். இதற்காக எந்த மருத்துவக் கல்லூரியிலும் அவர்கள் சேரத்தேவை இல்லை.

2 ஆண்டு கட்டாய சுழற்சி முறை பயிற்சி 

எழுத்து தேர்வு, இந்திய எம்.பி.பி.எஸ். பாடத்திட்டத்தின்படி நடைபெறும். பயிற்சி, குறிப்பிட்ட சில அரசு மருத்துவக்கல்லூரிகளில் மட்டுமே அனுமதிக்கப்படும். இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறுகிற மாணவர்கள் 2 ஆண்டு கட்டாய சுழற்சி முறையிலான பயிற்சி பெற வேண்டும்.

உதவித்தொகை

முதல் ஆண்டு எந்த உதவித்தொகையும் வழங்கப்படாது. இரண்டாது ஆண்டு உதவித்தொகை வழங்கப்படும். இதற்கான முடிவினை தேசிய மருத்துவ கமிஷன் எடுத்துள்ளது. தற்போதைய பிரச்சினைக்கு மட்டுமே இந்த முடிவு பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு

முதலில் உக்ரைன் மருத்துவ மாணவர்கள் இங்கே தங்கள் படிப்பைத்தொடர முடியாது என உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு தெரிவித்ததும், இந்த மாணவர்களுக்கு அரசு உதவ வேண்டும் என்று உச்சநீதி மன்றம் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.

Related Articles

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -spot_img

Latest Articles