ஜெனிவா, மார்ச் 03
நித்தியானந்தாவின் பிரதிநிதிகள் பேசிய கருத்துகள் புறக்கணிக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
பாலியல் புகாரில் சிக்கிய சாமியார் நித்தியானந்தா இந்தியாவை விட்டு தப்பிச் சென்றார். அவர் தனது ஆசிரமத்தை ‘கைலாசா’ என்ற தனி நாட்டில் உருவாக்கியுள்ளதாக கூறி வருகிறார். ஆனால், இந்த இடம் பற்றி பல ஊகங்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், ஜெனிவாவில் கடந்த மாதம் 24-ம் தேதி ஐ.நா அமைப்பின் பொருளாதார, சமூக, மற்றும் காலாச்சார உரிமைகள் குழு கூட்டம் நடந்துள்ளது. இதில் ‘கைலாசா குடியரசு’ சார்பில் நித்தியானந்தாவின் பிரதிநிதிகளாக பெண்கள் சிலர் கலந்துகொண்டனர்.
இந்த போட்டோக்கள் நித்தியானந்தாவின் டிவிட்டர்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ‘முடிவெடுக்கும் விஷயங்களில் பெண்களுக்கு சம உரிமை’என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் அனைத்து மகளிர் குழு பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : தனியார் பள்ளிகளுக்கு கட்டண நிலுவைத்தொகை ரூ.364 கோடி- தமிழக அரசு விடுவிப்பு
அதில் நிலையான வளர்ச்சிக்கு கைலாசா எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அந்த பெண் பிரதிநிதி பேசுகிறார். உணவு, இருப்பிடம், உடை, கல்வி, மருத்துவ சிகிச்சை போன்றவை கைலாசாவில் இலவசமாக வழங்கப்படுகிறது.
பழமையான இந்துமத பாரம்பரியத்தை மீண்டும் கொண்டு வர விரும்பும்இந்து மத தலைவர் நித்யானந்தாவுக்கு தொந்தரவு அளிக்கப்படுகிறது. சொந்த நாட்டிலேயே அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இந்த தொந்தரவை தடுத்த நிறுத்த தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
ஐ.நா அமைப்பில் 193 நாடுகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் கைலாசா இடம் பெறவில்லை. இதில் இடம் பெற ஐ.நா பாதுாப்பு கவுன்சில் மற்றும் பொது சபை அனுமதி வேண்டும்.
ஆனால் ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு, தங்கள் கூட்டத்தில் எந்த அமைப்பை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை பேசஅனுமதிக்கிறது. இதை பயன்படுத்தி கைலாசாவை ஐ.நா அங்கீகரித்தது போல் பொய்யான தோற்றத்தை நித்தியானந்தா ஏற்படுத்தியிருந்தார்.
இதனிடையே, கற்பனையான நாட்டிலிருந்து வந்த பிரதிநிதிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை எப்படி அனுமதி அளித்தது போன்ற கேள்விகள் பரவலாக எழுந்தன. இதற்கு ஐ.நா., ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு, தங்கள் கூட்டத்தில் எந்த அமைப்பை சேர்ந்தவர்களுக்கு பேச அனுமதி அளிக்கும் என்று தெரிவித்தது.
இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபை அதிகாரி ஒருவர் பேசும்போது, “கைலாசாவைச் சேர்ந்த பிரதிநிதிகள் பிப்ரவரி மாதம் நடந்த ஐ.நா. சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட தலைப்புடன் சற்றும் தொடர்பில்லாத கருத்து நித்தியானந்தாவின் பிரதிநிதிகளால் முன் வைக்கப்பட்டது. அவர்களின் கருத்து ஐக்கிய நாடுகள் சபையால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுவிட்டது” என்று தெரிவித்திருக்கிறார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.