
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகைக்கு காரணம் அமைச்சர் உதயநிதி தான் | மதிமுக பொதுச்செயலாளர் வை கோ
Union Minister Nirmala Sitharaman’s visit to flood affected area due to Minister Udayanidhi”s speech |mdmk general secretary Nirmala Sitharaman
மதுரை, டிச. 24
தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டமாக விமர்சித்த காரணத்தால்தான் தமிழ்நாட்டின் தூத்துக்குடி வெள்ள பாதிப்புகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட வருகை தருகிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்பது கோரிக்கை. இந்த கோரிக்கை தொடர்பாக பேசிய தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உங்க அப்பன் வீட்டு காசையா கேட்கிறோம்? தமிழ்நாட்டு வரி பணத்தைதானே கேட்கிறோம் என்றார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதேபோல டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாஷை சரியில்லை. உதயநிதி அப்படி பேசியிருக்கக் கூடாது என காட்டமாக கூறியிருந்தார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு தமிழ்நாட்டில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்கள்: தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை காயப்படுத்துகிறார் நிர்மலா சீதாராமன் | விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன்
இந்த நிலையில் வரும் டிசம்பர் 26-ந் தேதி தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்லா சீதாராமனின் டெல்லி பேட்டிக்கு தமிழ்நாட்டு அமைச்சர்கள், தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரையில் தந்தை பெரியார் 50-வது நினைவு நாளை முன்னிட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் வைகோ பேசியதாவது: அண்மைக்காலமாக தந்தை பெரியார் சிலை அவமதிப்பு அதிகரித்துள்ளது. திட்டமிட்டே பெரியார் சிலையை ஒரு கூட்டம் அவமதிப்பு செய்கிறது. நாங்கள் தக்க பதிலடியை தந்து வருகிறோம். பெரியார் சிலையை அவமதிப்போம் என ஒருவர் கூறிவிட்டு அவமதித்தால் கை இருக்காது.
தென் மாவட்ட வெள்ளத்தை மத்திய அமைச்சர் பார்வையிடவில்லை. இதனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்ட காரணத்தால்தான் தற்போது நிர்மலா சீதாராமன் வரும் 26-ந் தேதி பார்வையிட வருகிறார். இவ்வாறு வைகோ தெரிவித்தார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.