Home செய்திகள் விஜய் ஆண்டனிக்கு திரைப்பிரபலங்கள் நேரில் ஆறுதல்

விஜய் ஆண்டனிக்கு திரைப்பிரபலங்கள் நேரில் ஆறுதல்

0
விஜய் ஆண்டனிக்கு திரைப்பிரபலங்கள் நேரில் ஆறுதல்
vijay antony daughter committed suicide

விஜய் ஆண்டனிக்கு திரைப்பிரபலங்கள் நேரில் ஆறுதல்

Vijay Antony is comforted by screen stars in person

  • பிரேத பரிசோதனை முடிவடைந்து அவரது பெற்றோர் விஜய் ஆண்டனி – பாத்திமாவிடம் ஒப்படைக்கப்பு

  • மீராவின் உடல் இன்று மாலை அல்லது நாளை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறையில் புதைக்கப்படவுள்ளதாக தகவல்

சென்னை, செப். 19

விஜய் ஆண்டனிக்கு திரைப்பிரபலங்கள் நேரில் ஆறுதல்: இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தன் குடும்பத்துடன் சென்னை, டி.டி.கே சாலையில் வசித்து வருகிறார். இவருக்கு மீரா என்ற மகள் உள்ளார். 12-ஆம் வகுப்பு படித்து வந்த இவர் கடந்த ஒரு வருடமாக மன அழுத்தத்திற்காக சிகிச்சை எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மீரா இன்று அதிகாலை 3 மணியளவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மீராவின் உடல் சென்னை, ஓமந்தூரார் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை முடிவடைந்து அவரது பெற்றோர் விஜய் ஆண்டனி – பாத்திமாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இல்லத்தில் அஞ்சலி

தொடர்ந்து அவரது உடலானது டி.டி.கே சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. மீராவின் உடல் இன்று மாலை அல்லது நாளை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறையில் புதைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு திரைப்பிரபலங்கள் நேரில் ஆறுதல் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.