
100 குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் கொடுத்த விஜய் தேவரகொண்டா
vijay devaragonda gives one lakh each to 100 families
-
படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய் தேவரகொண்டா, எனது சம்பாத்தியத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயை தலா ஒரு லட்சம் வீதம் 100 குடும்பங்களுக்கு கொடுப்பேன்
-
செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘குஷி’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 70 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
ஹைதராபாத், செப். 15
100 குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் கொடுத்த விஜய் தேவரகொண்டா: இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா – சமந்தா நடிப்பில் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘குஷி’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 70 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
இதையும் படியுங்கள் : திருச்சியில் மர்ம காய்ச்சலால் இளம் பெண் பலி
தலா ஒரு லட்சம் வீதம் 100
இதையடுத்து இப்படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய் தேவரகொண்டா, எனது சம்பாத்தியத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயை தலா ஒரு லட்சம் வீதம் 100 குடும்பங்களுக்கு கொடுப்பேன் என்றும் இந்த தொகை ஹைதராபாத்தில் நடைபெறும் குஷி நிகழ்ச்சிக்கு முன்னதாக கொடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டா தான் சொன்னது போன்று 100 குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் ஒரு கோடி ரூபாயை வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.