
தாஜ்மஹாலை கட்டியது யார் ? | இந்து சேனா சுர்ஜித் யாதவ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
Who built the Taj Mahal? | Hindu Sena Surjit Yadav filed petition in Delhi High Court
-
ராஜா மான் சிங்கின் அரண்மனையையே ஷாஜஹான் சீரமைத்துள்ளார். எனவே வரலாற்றை மாற்றி எழுதவேண்டும் என கோரியுள்ளார்.
-
டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், சுர்ஜித் யாதவ், முகலாய மன்னர் ஷாஜஹான் தாஜ்மகாலை கட்டவில்லை.
புது டெல்லி, நவ. 03
உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் ஆக்ராவில் யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது தாஜ்மகால். சுமார் 42 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்தக் கட்டிடம் உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம் காதலின் சின்னமாகக் கருதப்பட்டு வருகிறது.
முகலாய மன்னரான ஹாஜஹான் தனது மனைவி மும்தாஜ் நினைவாக தாஜ்மகாலை கட்டியதாகத்தான் நாம் படித்து வந்தோம்; வருகிறோம்.
ஆனால், இதைக் கேள்விக்குள்ளாக்கி மனுதாக்கல் செய்துள்ளார் இந்து சேனா அமைப்பைச் சேர்ந்த சுர்ஜித் யாதவ்.
இதையும் படியுங்கள் : அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை சோதனை | பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் வீட்டிலும் சோதனை
இதுதொடர்பாக, டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், சுர்ஜித் யாதவ், முகலாய மன்னர் ஷாஜஹான் தாஜ்மகாலை கட்டவில்லை. ராஜா மான் சிங்கின் அரண்மனையையே ஷாஜஹான் சீரமைத்துள்ளார். எனவே வரலாற்றை மாற்றி எழுதவேண்டும் என கோரியுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.