Wednesday, December 18, 2024

உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியல்: முனைவர் ஆரோக்கியராஜ், பேரா.சந்திரசேகரன், பேரா.பாலமுரளிகிருஷ்ணனுக்கு இடம்

உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியல்: முனைவர் ஆரோக்கியராஜ், பேரா.சந்திரசேகரன், பேரா.பாலமுரளிகிருஷ்ணனுக்கு இடம்

World’s Greatest Scientists List: Dr. Arokiyaraj, Prof. Chandrasekaran, Prof. Balamuralikrishnan Place

சென்னை, அக். 24
அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் எல்சிவியர் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் 2 சதவீதம் விஞ்ஞானிகளின் தரவரிசை பட்டியல் வெளியிட்டு வருகின்றன. எச்-இன்டெக்ஸ், கோ-ஆதர்ஷிப், எச்.எம்-இன்டெக்ஸ் போன்ற தரவரிசை அடிப்படையில் உலகளவில் விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

நடப்பாண்டு ஆகஸ்டில் வெளியிடப்பட்ட பட்டியலில் 22 அறிவியல் துறைகள், 174 துணைத் துறைகள் கீழ் 2.17 லட்சத்துக்கும் மேலான ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர். இதில் வாழ்நாள் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவில் 2,939 விஞ்ஞானிகள் இடம் பெற்றுள்ளனர். 2023-ம் ஆண்டுக்கான பட்டியலில் 5,351 விஞ்ஞானிகள் இடம் பெற்றுள்ளனர்.

world's greatest scientist
world’s greatest scientist

உயிரியல் தொழில்நுட்பம் மற்றும் உணவு அறிவியல் பட்டியலில் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவரும், தென் கொரியாவின் சியோல் செஜாங் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் முனைவர் செ.ஆரோக்கியராஜ் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இடம் பெற்றுள்ளார்.

இவர் தமிழ்நாடு அரசின் வெளிநாடுவாழ் தமிழர் மொழியியல் சேவைக்கான விருது பெற்றவர். மேலும் முனைவர் செ.ஆரோக்கியராஜ், தமிழர் – கொரியா மக்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள துவங்கப்பட்டுள்ள “தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு”பின் தலைவராகவும் உள்ளார்.

world's greatest scientist
world’s greatest scientist

அதே செஜாங் பல்கலைக்கழகத்தில் உயிர் தொழில்நுட்பம் மற்றும் தாவிர நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் சந்திரசேகரன், உணவு அறிவியியல் மற்றும் விலங்கு அறிவியல் துறை பேராசிரியர் பாலமுரளி கிருஷ்ணனும் உலகின் 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். பேராசிரியர் பாலமுரளி கிருஷ்ணன் மூன்றாவது ஆண்டாக தேர்வு பெற்றுள்ளார்.

இதில் பேராசிரியர் சந்திரசேகரன் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர். தஞ்சை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் பேராசிரியர் பாலமுரளி கிருஷ்ணன்.

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் எல்சிவியர் வெளியிட்டுள்ள 2 சதவீதம் விஞ்ஞானிகளின் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள முனைவர் செ.ஆரோக்கியராஜ், பேராசிரியர் சந்திரசேகரன், பேராசிரியர் பாலமுரளி கிருஷ்ணன் ஆகியோருக்கு செஜாங் பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று ஏழாவது புதுப்பிக்கப்பட்ட அறிவியல் ஆசிரியர் பட்டியலில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பேராசிரியர்கள் எம்.லட்சுமணன் (இயற்பியல்), ஆர்.ரமேஷ் (வேதியல்), எம்.பழனியாண்டவர் (வேதியியல்), எம்.சத்தியபாமா (தாவரவியல்), முனைவர் தை.சி.சபரி கிரிசன் (இயற்பியல்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளைச் சேர்ந்த முனைவர் கே.ரவிச்சந்திரன் (இயற்பியல்), முனைவர் எம்.அய்யனார் (தாவரவியல்), முனைவர் எம்.ஜோதிபாஸ் (இயற்பியல்) ஆகிய மூவரும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.

Related Articles

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -spot_img

Latest Articles