Home தமிழகம் ஒரு கோடி குடும்பத்தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் 

ஒரு கோடி குடும்பத்தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் 

0
ஒரு கோடி குடும்பத்தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் 
tamilnadu chief minister mk stalin

ஒரு கோடி குடும்பத்தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் 

1 crore family female heads benefits by magalir urimai thogai

 

  • மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியாகும் என்று அமைச்சர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்

  • தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சமூக நீதி திட்டங்களிலேயே மாபெரும் முன்னெடுப்பாக வரலாற்றில் விளங்க மகத்தான மகளிர் உரிமை தொகை வழங்கக் கூடிய திட்டம் ஏறத்தாழ ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அமைந்திடும் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

சென்னை, மார்ச்.27

நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், மீனவ மகளிர், கட்டுமான தொழிலில் பணிபுரியும் மகளிர், சொற்ப ஊதியங்களில் வேலை செய்திடும் மகளிர், இல்லங்களில் பணியாற்றும் மகளிர் என ஏறத்தாழ ஒரு கோடி குடும்பத் தலைவிகள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் பயன்பெறுவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

cm mk stalin
tamilnadu chief minister mk stalin
மகளிர் உரிமைத் தொகை
அண்மையில் தமிழ்நாடு பட்ஜெட்டில் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ‘தகுதிவாய்ந்த’ என்ற வார்த்தைக்கான காரணம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.
இதன் பின்னர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியாகும் என்று அமைச்சர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அதில், தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத பல உன்னதமான திட்டங்களையும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டின் மகத்தான திட்டமான மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பெண்களுக்கான சமூக பொருளாதாரத்தை மீட்க எவ்வளவோ தலைவர்கள் வந்தாலும் பெரியாரின் சுயமரியாதை இயக்கமே பெண் விடுதலைக்கு பாதை அமைத்தது.
ptr palanivel thiagarajan
ptr palanivel thiagarajan
சமூக உரிமை
கிராம பொருளாதாரத்தை சுமப்பதாக பெண்கள் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. ஒரு ஆணுடைய வெற்றிக்காகவும், குழந்தைகளின் கல்வி, சமூகத்திற்காகவும் எத்தனை மணி நேரங்கள் அவர்கள் உழைத்திருப்பார்கள். அவர்களுக்கான ஊதியம்தான் இது. ஆண்கள் அங்கீகரித்தால் பெண்களுக்கான சமூக உரிமை வழங்கிடும் நிலை உருவாகும் என இந்த அரசு நம்புகிறது. பல்வேறு வகைகளில் விலைமதிப்பில்லாத உழைப்பை வழங்கும் பெண்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுவார்கள்.
வழிகாட்டு நெறிமுறைகள்

நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், அதிகாலை கடற்கரை விரைந்திடும் மீனவ மகளிர், கட்டுமான தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகளில் சொற்ப ஊதியங்களில் வேலை செய்திடும் மகளிர், ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இல்லங்களில் பணியாற்றும் மகளிர் என பலரும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் பயன்பெறுவார்கள். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். மகளிர் உரிமைத் தொகை வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்

பெண்களுக்கு அங்கீகாரம்

இந்த திட்டத்திற்கான முதல் நோக்கம் பெண்களுக்கு அங்கீகாரம் கொடுப்பது தான். இரண்டாவது நோக்கம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாகும். இதனை செய்ய முடியுமா, நிதி இருக்குமா என்று கேள்வி எழுப்பி, அச்சத்தை வெளிப்படுத்தி வந்தவர்களுக்கு பதிலளிக்கும் வகையில், தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சமூக நீதி திட்டங்களிலேயே மாபெரும் முன்னெடுப்பாக வரலாற்றில் விளங்க மகத்தான மகளிர் உரிமை தொகை வழங்கக் கூடிய திட்டம் ஏறத்தாழ ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அமைந்திடும் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்