Home செய்திகள் 12 மணி நேர வேலை சட்டம் : தொழிற்சங்கப்பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை

12 மணி நேர வேலை சட்டம் : தொழிற்சங்கப்பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை

0
12 மணி நேர வேலை சட்டம் : தொழிற்சங்கப்பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை
cm mk stalin

 

12 மணி நேர வேலை சட்டம் : தொழிற்சங்கப்பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை

12 hours work bill : trade union representatives negotiate

  • தமிழக அரசின் 12 மணி நேர வேலை சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி, வருகின்ற மே 12ம் தேதி வேலைநிறுத்தம்

  • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இன்று இரவு 7 மணிக்கு சந்திக்கவுள்ளனர்

சென்னை , ஏப். 24

12 மணி நேர வேலை சட்டத்திருத்த மசோதா தொடர்பாக அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் அடங்கிய குழுவுடன் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தனியார் நிறுவனங்களில் 12 மணி நேரம் வேலை செய்ய வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் பல்வேறு துறைச் செயலாளர்கள் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

இதையும் படியுங்கள் : கர்நாடக சட்டசபை தேர்தல் : காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி (ஏப்ரல் 25, 26)  பிரச்சாரம்

இந்த பேச்சுவார்த்தையில், தொமுச, அண்ணா தொழிற்சங்கம், சிஐடியூ, ஐஎன்டியூசி, பாட்டாளி தொழிலாளர் பேரவை, ஆம் ஆத்மி, மக்கள் தேசிய கட்சி, ஹிந்து மஸ்தூர் சபா, தமிழ்நாடு வீட்டு வேலை சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு 12 மணி நேர வேலை மசோதா குறித்து தங்களது கருத்துகளைப் பதிவு செய்துவருகின்றனர்.

தமிழக அரசின் 12 மணி நேர வேலை சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி, வருகின்ற மே 12ம் தேதி வேலைநிறுத்தம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இன்று இரவு 7 மணிக்கு சந்திக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.