Home இந்தியா 125 அடி உயர அம்பேத்கர் சிலை திறப்பு

125 அடி உயர அம்பேத்கர் சிலை திறப்பு

0
125 அடி உயர அம்பேத்கர் சிலை திறப்பு
ambedkar statue

 

125 அடி உயர அம்பேத்கர் சிலை திறப்பு

125 ft height ambedkar statue inauguration

  • நாடாளுமன்ற கட்டிட வடிவில் அம்பேத்கருக்கு 125 அடி உயரத்தில் சிலை

  • இந்தியாவிலேயே உயரமான சிலை

ஐதராபாத், ஏப் .14

ஐதராபாத் ஹூசைன் சாகர் பகுதியில் நாடாளுமன்ற கட்டிட வடிவில் அம்பேத்கருக்கு 125 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி விரைவில் சுற்றுலா தலமாக மாற்றப்பட உள்ளது.

இதையும் படியுங்கள்தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளில் கணினி தேர்வினை நடத்த தி.மு.க. இளைஞர் அணி-மாணவர் அணி “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

என்டிஆர் கார்டன் பகுதி

ரூ.148.50 கோடியில் சுமார் 11.80 ஏக்கர் நிலத்தில் என்டிஆர் கார்டன் பகுதியில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளுக்கு எஸ்சி நலத்துறை நிதி வழங்கிய நிலையில், கட்டுமானப் பொறுப்பு சாலைகள் மற்றும் கட்டிடங்கள் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு ஒரு வருடத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

125 அடி உயர அம்பேத்கர் சிலை

ஹைதராபாத்தில் உள்ள இந்த 125 அடி உயர அம்பேத்கர் சிலையை முதல்வர் கே சந்திரசேகர் ராவ் திறந்து வைத்தார். இந்த சிலை இந்தியாவிலேயே உயரமான சிலை என்ற பெருமைக்குரியதாக திகழ்க்கிறது. இந்நிகழ்ச்சியில் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், தெலுங்கானா அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.