Home News ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் லித்தியம் இருப்பு- மத்திய அரசு 

ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் லித்தியம் இருப்பு- மத்திய அரசு 

0
ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் லித்தியம் இருப்பு- மத்திய அரசு 
  • லித்தியம் தான் மின்சார வாகனங்களுக்குத் தேவைப்படும் பேட்டரிக்களுக்கு முக்கிய தேவை

  • ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது மத்திய அரசு 

காஷ்மீர், பிப்.10

கார்பன் உமிழ்வைக் குறைக்க உலகின் அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரி தயாரிக்கத் தேவையான முக்கிய தாதுவான லித்தியம் நாட்டிலேயே முதல்முறையாகக் காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

பூமி இப்போது பருவநிலை மாற்றம் தொடங்கி பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. புவி வெப்ப மயமாதலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இதனால் பெட்ரோல் வாகன பயன்பாட்டைக் குறைத்து… மின்சார வாகனங்களை நோக்கிச் செல்ல அனைத்து நாடுகளும் ஊக்குவித்து வருகிறது. மின்சார வாகனங்களுக்கு மிக மிக முக்கியமானது என்றால் அது பேட்டரிக்கள் தான்.

இப்போது உருவாக்கப்படும் பேட்டரிக்கள் பெரும்பாலும் லித்தியன் ஐயான் பேட்டரிக்களாகவே உள்ளன. இதற்கிடையே நாட்டிலேயே முதன்முறையாக ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த லித்தியம் தான் மின்சார வாகனங்களுக்குத் தேவைப்படும் பேட்டரிக்களுக்கு முக்கிய தேவையாகும். காற்று மாசை குறைக்க மின்சார வாகனங்களை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இப்போது பேட்டரிக்களுக்கு தேவையான முக்கிய தாது உள்நாட்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரியாசி மாவட்டத்தின் சலால்-ஹைமானா பகுதியில் 5.9 மில்லியன் டன்கள் கொண்ட லித்தியம் வளங்களை இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் கண்டுபிடித்துள்ளதாகச் சுரங்க துறை தெரிவித்துள்ளது. இந்தியா முழுக்க பல மாநிலங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. நாட்டில் மொத்தம் 51 கனிம தொகுதிகளில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. இவை அனைத்தும் இப்போது சம்மந்தப்பட்ட மாநில அரசிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த 51 கனிமத் தொகுதிகளில், 5 தொகுதிகள் தங்கமும் மற்ற தொகுதிகளில் பொட்டாஷ், மாலிப்டினம் உள்ளிட்ட தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை ஜம்மு மற்றும் காஷ்மீர் (UT), ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய 11 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளன. இவை தவிர, 7897 மில்லியன் டன் நிலக்கரி மற்றும் லிக்னைட் பற்றிய 17 அறிக்கைகளும் நிலக்கரி அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

இதையும் படியுங்கள் : அதானி நிறுவனத்தில் ஜி.எஸ்.டி. முறைகேடா ? – கலால் வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

இப்படிப் பல கனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட இதில் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் லித்தியம் கண்டறியப்படுவது இதுவே முதல்முறையாகும். வரும் காலங்களில் லித்தியம் பேட்டரி பயன்பாடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த பேட்டரிக்களையும் இந்தியாவிலேயே தயாரிக்க முடியும். இதனால் பேட்டரி வாகனங்களில் விலையும் கூட கணிசமாகக் குறையும்.

ரயில்வே-க்கு தேவையான நிலக்கரி டெபாசிட்களை கண்டுபிடிக்க 1851இல் இந்தியப் புவியியல் ஆய்வு மையம் (ஜிஎஸ்ஐ) அமைக்கப்பட்டது. அதன் பிறகு நிலக்கரி தவிரப் பல முக்கிய தாதுகளையும் கண்டறியத் தொடங்கியது. சர்வதேச அளவிலும் புவி-அறிவியல் துறையில் இது முக்கியமான ஒரு இடத்தை பெற்றுள்ளது. இதன் முக்கிய பணி தேசிய புவி அறிவியல் தகவல் மற்றும் கனிம வள மதிப்பீட்டை உருவாக்குவதே ஆகும்.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்