Wednesday, December 18, 2024

தமிழகத்தில் புதிதாக 75,702 பேருக்கு காசநோய் பாதிப்பு

தமிழகத்தில் புதிதாக 75,702 பேருக்கு காசநோய் பாதிப்பு

75,702 new cases of tuberculosis in Tamil Nadu

  • 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள்

  • வீடுகளிலேயே சளி மாதிரி எடுக்கப்பட்டு, தேவைப்படுபவர்களுக்கு நடமாடும் ஊடுகதிர்கருவிகளை அவர்களின் வீடுகளுக்கே அனுப்பி ஊடுகதிர் படம் எடுக்கப்படுகிறது.

சென்னை, நவ. 02

தமிழகத்தில் நடப்பாண்டில் புதிதாக 75,702 பேருக்கு காசநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய,மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் நோயாளிகளைக் கண்டறிதல், கூட்டு மருந்து சிகிச்சைகளை அளித்தல், தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் என காசநோய் ஒழிப்புத் திட்டப் பணிகள் செயல்படுத்தப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் காச நோயாளிகளுக்கு தேவைப்படும் மருந்துகள் களப்பணியாளர்கள் மூலம் அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படுகின்றன. அவர்களது வீடுகளிலேயே சளி மாதிரி எடுக்கப்பட்டு, தேவைப்படுபவர்களுக்கு நடமாடும் ஊடுகதிர்கருவிகளை அவர்களின் வீடுகளுக்கே அனுப்பி ஊடுகதிர் படம் எடுக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

இந்த நடவடிக்கைகளால், அந்தநோயின் தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களில் 84 சதவீதம் பேர் முதல் சிகிச்சையிலேயே குணப்படுத்தப்படுகின்றனர். தொடர் சிகிச்சைகள் மூலம் மீதமுள்ளவர்கள் குணமடைந்து வருகின் றனர்.

இந்நிலையில், நடப்பாண்டில் நாடு முழுவதும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காசநோய் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டவர்களின் தரவுகளை சுகாதாரத் துறை ஆய்வு செய்தபோது, 21 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு அந்நோய் இருந்தது கண்டறியப்பட்டது. தமிழகத்தில் 75,702 பேருக்கு காசநோய் பாதிப்பு இருந்தது. அவர்களில், தனியார் மருத்துவமனைகளில் 24,685 பேரும், அரசு மருத்துவமனைகளில் 50,837 பேரும் முதல்கட்ட சிகிச்சை பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் தமிழகத்தில் எண்ணிக்கை 3 சதவீதம் அதிகமாக இருந்தது குறிப் பிடத்தக்கது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.

Related Articles

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -spot_img

Latest Articles