
("This budget is an example of the Dravidian model"-boasted Chief Minister M.K.Stalin)
“திராவிட மாடலுக்கு எடுத்துக்காட்டு இந்த பட்ஜெட்” – மு.க.ஸ்டாலின் பெருமிதம்
* தமிழ்நாட்டை நோக்கி 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளோம்.
* தமிழ்நாட்டை தலைநிமிர வைக்கும் நிதிநிலை அறிக்கையை உருவாக்கிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு நன்றி.
சென்னை, மார்ச். 20
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்து உள்ளார்.
“சென்னை, 2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இந்த பட்ஜெட் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
மு.க.ஸ்டாலின் கருத்து
இந்த நிலையில், தமிழ்நாடு பட்ஜெட் குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
“இன்று வெளியான நிதிநிலை அறிக்கை திராவிட மாடல் என்ற கருத்தியலை முழுமையாக உள்ளடக்கியதாக அமைந்து உள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் வாழ்நாள் முழுக்க வாழ்க்கைக்கு உதவப் போகும் பல நலத்திட்டங்கள் பட்ஜெட்டில் உள்ளன.
நிர்வாகத்தை சரிசெய்து நிதியையும் சரிசெய்ய திமுக அரசுக்கு கால அவகாசம் தேவைப்பட்டது. தமிழ்நாட்டை நோக்கி 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளோம்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு நன்றி
தனிமனிதர் நலன், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வளர்ச்சியை மனதில் வைத்து திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. தமிழ்நாட்டை தலைநிமிர வைக்கும் நிதிநிலை அறிக்கையை உருவாக்கிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு நன்றி.
இதையும் படியுங்கள் : தமிழ் நாடு பட்ஜெட் 2023-2024 : முக்கிய அம்சங்கள்
எல்லோர்க்கும் எல்லாம் என்ற திசை நோக்கிய நமது பயணம் தொடரும்.. வெல்லும். திட்டங்களை முழுமையாக நிறைவேற்றி, முழு பயன்களையும் மக்களுக்கு வழங்க அமைச்சர்களும், அதிகாரிகளும் பாடுபட வேண்டும்”.
இவ்வாறு முதல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.