Home சினிமா சூரியின் நடிப்பு -பிரமிப்பு-விடுதலை படத்தை பார்த்த ரஜினி பாராட்டு 

சூரியின் நடிப்பு -பிரமிப்பு-விடுதலை படத்தை பார்த்த ரஜினி பாராட்டு 

0
சூரியின் நடிப்பு -பிரமிப்பு-விடுதலை படத்தை பார்த்த ரஜினி பாராட்டு 
rajini with viduthalai movie team

சூரியின் நடிப்பு -பிரமிப்பு-விடுதலை படத்தை பார்த்த ரஜினி பாராட்டு 

Rajini praises soori  for his performance is outstanding in viduthalai movie

  • ‘விடுதலை’ இதுவரை தமிழ் திரையுலகம் பார்த்திராத கதைக்களம்.

  • “என்ன சொல்றதுன்னே தெரியலை தலைவரே… நெஞ்சார்ந்த நன்றிகள்… என் கால்கள் தரையில் இல்லை.

சென்னை, ஏப். 08

கனவிலும் நினைக்காத தருணங்களை தற்போது வாழ்ந்து வருகிறேன்’ என்று நடிகர் சூரி, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து குறித்து தெரிவித்துள்ளார்.

“ ‘விடுதலை’ படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இது ஒரு திரைக்காவியம் என்று தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘விடுதலை’ இதுவரை தமிழ் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம்.

இதையும் படியுங்கள்தமிழர்களை சீண்டுவதை நிறுத்துங்கள் -ஆளுநருக்கு சீமான் அறிவுறுத்தல்

சூரியின் நடிப்பு -பிரமிப்பு. இளையராஜா -இசையில் என்றும் ராஜா. வெற்றிமாறன் – தமிழ் திரையுலகின் பெருமை. தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள். இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.” என்று தெரிவித்து இருந்தார்.

இதற்கு நன்றி தெரிவித்து நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில், “என்ன சொல்றதுன்னே தெரியலை தலைவரே… நெஞ்சார்ந்த நன்றிகள்… என் கால்கள் தரையில் இல்லை… கனவிலும் நினைக்காத தருணங்களை தற்போது வாழ்ந்து வருகிறேன்…” என்று தெரிவித்துள்ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.