திருச்சியில் இன்று உதயமாகிறது அஷ் ஸஃபர் டூர்ஸ் & டிராவல் சர்வீஸ் நிறுவனம் – அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைக்கிறார்
Tomorrow dawns in Trichy AS SAFAR TOURS & TRAVEL SERVICE COMPANY – Inaugurated by Minister KN Nehru
-
புதிய நிறுவன திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை எம்.எஸ். வேர்ல்ட் டூர்ஸ் & டிராவல்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் ஷாஜஹான் மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
-
எம்.எஸ்.வேர்ல்ட் டூர்ஸ் & டிராவல்ஸ் நிறுவனம் சுற்றுலா பயணிகளுக்கு விசா, விமான டிக்கெட்டுக்கள் மற்றும் அனைத்து பயண ஏற்பாடுகளையும் மிக குறைந்த கட்டணத்தில் செய்து கொடுத்து வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது.
திருச்சி, ஜூன். 18
திருச்சியில் இன்று உதயமாகும் சர்வதேச சுற்றுலா நிறுவனமான அஷ் ஸஃபர் டூர்ஸ் & டிராவல் சர்வீஸ் நிறுவனத்தை அமைச்சர் கே.என். நேரு திறந்து வைக்கிறார்.

உள் நாட்டில் மட்டுமின்றி சர்வதேச நாடுகளுக்கு மக்கள் சுற்றுலா சென்று வர நம்பிக்கையான நிறுவனமாக திகழ்கிறது சென்னை அண்ணா சாலையிலும், வளைகுடா நாடான துபாயிலும் இயங்கி வரும் எம்.எஸ். வேர்ல்ட் டூர்ஸ் & டிராவல்ஸ் நிறுவனம்.

இந்த நிறுவனம், வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கேற்ப இந்திய நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் இன்ப சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்து கொடுத்து வருகிறது. அத்துடன் ஹஜ் – உம்ரா பயண ஏற்பாடுகளையும் செய்கிறது.
எம்.எஸ்.வேர்ல்ட் டூர்ஸ் & டிராவல்ஸ் நிறுவனம் சுற்றுலா பயணிகளுக்கு விசா, விமான டிக்கெட்டுக்கள் மற்றும் அனைத்து பயண ஏற்பாடுகளையும் மிக குறைந்த கட்டணத்தில் செய்து கொடுத்து வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது.
இதையும் படியுங்கள் : நீட் தேர்வு : தமிழகத்தில் 54 சதவீதம் தேர்ச்சி ; அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 31 சதவீதம் தேர்ச்சி
தற்போது எம்.எஸ். வேர்ல்ட் டூர்ஸ் & டிராவல்ஸ் குழுமத்தின் சார்பில் இன்று (19ந் தேதி) காலை 11.00 மணியளவில் திருச்சி நகரில் கண்டோன்மென்ட், பாரதிதாசன் சாலை, டாப்ஸ் காம்ப்ளஸ், எண். 41 என்ற முகவரியில் அஷ் ஸஃபர் டூர்ஸ் & டிராவல் சர்வீஸ் என்ற புதிய நிறுவனத்தை துவங்குகிறது.
புதிய நிறுவனத்தை அமைச்சர் கே. என். நேரு திறந்து வைக்கிறார். திருச்சி மாநகர மேயர் மு. அன்பழகன் அலுவலகத்தை திறக்கிறார்.
அத்துடன் திருச்சி அன்வாருல் உலும் அரபிக்கல்லூரியின் முதல்வர் மௌலானா. ரூஹுல் ஹக் ஆலிம், சென்னை இல்மியா டிரஸ்ட் மௌலானா சம்சுதீன் காஷிமி, திருச்சி ஜமாத்துல் உலமா செயலாளர் மௌலானா சிராஜுதீன் ஆகியோர் துவாவுடன் திறக்க, ஏராளமான முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.
புதிய நிறுவன திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை எம்.எஸ். வேர்ல்ட் டூர்ஸ் & டிராவல்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் ஷாஜஹான் மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.