
இண்டேன் சமையல் எரிவாயு தானியங்கி பதிவு தமிழ் சேவையை தர வேண்டும் | மதுரை எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தல்
Indane cooking gas should provide automatic registration tamil service | Madurai MP S.Venkatesan emphasized
-
புக்கிங் சேவையில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகள் நீக்கப்பட்டு இந்தி மட்டுமே இருப்பதாக புகார்கள் எழுந்திருக்கின்றன. இதன் காரணமாக புதிய சிலிண்டர்களை புக் செய்வதில் பிரச்சனை எழுந்திருப்பதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
-
இன்டேன் தானியங்கி சமையல் எரிவாயு பதிவு சேவையில் இவ்வளவு காலம் தமிழ், ஆங்கிலத்திற்கான வாய்ப்புகள் தரப்பட்டிருந்தன. தற்போது அந்த வாய்ப்புகள் நீக்கப்பட்டு இந்தி சேவை மட்டுமே கிடைக்கிறது.
மதுரை, நவ. 04
இன்டேன் தானியங்கி சமையல் கேஸ் பதிவு சேவையில் தமிழ் மொழி சேவை நிறுத்தப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்திருக்கிறது. இதனையடுத்து உடனடியாக தமிழ் சேவையை உறுதிப்படுத்த வேண்டும் என இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் தலைவருக்கு, மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

தானியங்கி சமையல் கேஸ் பதிவு சேவை
நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இன்டேன் சமையல் கேஸ் சிலிண்டரை பயன்படுத்துகிறார்கள். குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒரு முறை சிலிண்டர்கள் காலியாவதால் அதை புக் செய்து புதிய சிலிண்டரை பெற்று வருகிறார். இதற்காக தானியங்கி சமையல் கேஸ் பதிவு சேவை செயல்பட்டு வருகிறது. இதில் அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப பிராந்திய மொழிகள் பயன்படுத்தப்படுவதால் மக்கள் எந்த சிரமமும் இல்லாமல் சிலிண்டரை புக் செய்து வருகின்றனர்.
புக்கிங் சேவையில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகள் நீக்கம்
ஆனால் தற்போது இந்த புக்கிங் சேவையில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகள் நீக்கப்பட்டு இந்தி மட்டுமே இருப்பதாக புகார்கள் எழுந்திருக்கின்றன. இதன் காரணமாக புதிய சிலிண்டர்களை புக் செய்வதில் பிரச்சனை எழுந்திருப்பதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் தலைவருக்கு, மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருக்கிறார். அதில் தானியங்கி சமையல் கேஸ் பதிவு சேவையில் தமிழ் சேவையை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள் : தமிழகத்தில் கனமழை | பள்ளிகளுக்கு விடுமுறை
மேலும், “இன்டேன் தானியங்கி சமையல் எரிவாயு பதிவு சேவையில் இவ்வளவு காலம் தமிழ்,mp ஆங்கிலத்திற்கான வாய்ப்புகள் தரப்பட்டிருந்தன. தற்போது அந்த வாய்ப்புகள் நீக்கப்பட்டு இந்தி சேவை மட்டுமே கிடைக்கிறது. அலைபேசி வழியாக பதிவு செய்யப் போகிற மக்கள் என்னவென்றே புரியாமல் திகைத்து நிற்கிறார்கள்.

விதிகளை மீறுவதற்கு தைரியம் அளித்தது யார்?
சமையல் எரிவாயு வேண்டுமென்றால் இந்தி கற்றுக் கொண்டு வா’ என்று மக்களை துரத்துவது போல உள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அதிகாரிகளுக்கு அலுவல் மொழி விதிகள் தெரியுமா? அதில் இந்திய மாநிலங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு இருப்பது தெரியுமா? குறிப்பாக தமிழ்நாட்டிற்கு அந்த விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருப்பது தெரியுமா? இல்லை தெரிந்தே மீறுகிறார்களா? விதிகளை மீறுவதற்கு தைரியம் அளித்தது யார்? அமைச்சக மட்டத்தில் இருந்து நிர்ப்பந்தமா? மீண்டும் இண்டேன் சமையல் எரிவாயு தானியங்கி பதிவு தமிழ் சேவையை தர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.