
தமிழகம் முழுவதும் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு | பேரிடர் மாநில மீட்பு குழுவினர் தயார்
Chance of heavy rain for 5 days across Tamil Nadu | Disaster State Rescue Team is ready
-
ஒவ்வொரு மீட்புக்குழுவிற்கும் 30 பேர் என்னும் வீதம் 540 பேர் இந்த குழுவில் அமைக்கப்பட்டுள்ளனர். அதன்படி திருச்சி மாவட்டத்துக்கு மட்டும் 4 குழுக்கள் வந்துள்ளனர்.
-
அதே போல் தமிழக காவல்துறை சார்பில் பொதுமக்கள் நலனுக்காக 24 மணிநேரமும் செயல்படும் வண்ணம் அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி, நவ. 15
வட கிழக்கு பருவமழை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வந்த நிலையில், அந்தமான் கடற்பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலையாக உருமாறியுள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் 18 பேரிடர் மாநில மீட்பு குழுவினர் அதிநவீன உயர்ரக மீட்பு கருவிகளோடு தயார் நிலையில் உள்ளனர்.
இதையும் படியுங்கள் :மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா காலமானார்
ஒவ்வொரு மீட்புக்குழுவிற்கும் 30 பேர் என்னும் வீதம் 540 பேர் இந்த குழுவில் அமைக்கப்பட்டுள்ளனர். அதன்படி திருச்சி மாவட்டத்துக்கு மட்டும் 4 குழுக்கள் வந்துள்ளனர். இந்த குழுவினர் தேவைக்கேற்ப திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இக்குழுவினர் அனுப்பப்படுவார்கள் என்றும் தெரிகிறது.
இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சூசைராஜ் ஆகியோர் தலைமையிலான இந்த குழுவினர் திருச்சியில் உள்ள தமிழ்நாடு காவல் பயிற்சி மையத்தில் மீட்பு பணி ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர். அதே போல் தமிழக காவல்துறை சார்பில் பொதுமக்கள் நலனுக்காக 24 மணிநேரமும் செயல்படும் வண்ணம் அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.