Home இந்தியா ‘பாரத மாதா கி ஜே’ முழக்கத்தை உருவாக்கியவர் ஒரு முஸ்லிம் – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேச்சு

‘பாரத மாதா கி ஜே’ முழக்கத்தை உருவாக்கியவர் ஒரு முஸ்லிம் – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேச்சு

0
‘பாரத மாதா கி ஜே’ முழக்கத்தை உருவாக்கியவர் ஒரு முஸ்லிம் – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேச்சு
The Wayanad landslide should be declared a national calamity - Kerala Chief Minister Pinarayi Vijayan's request

‘பாரத மாதா கி ஜே’ முழக்கத்தை உருவாக்கியவர் ஒரு முஸ்லிம் – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேச்சு

‘Bharat Mata Ki Ja’ slogan coined by a Muslim – Kerala Chief Minister Pinarayi Vijayan’s speech

  • இந்த முழக்கத்தை உருவாக்கியவர் ஒரு முஸ்லிம் என்பதால் அவர்கள் அதை பயன்படுத்துவதை நிறுத்துவார்களா என்பது எனக்கு தெரியாது.அதேபோல் அபித் ஹசன் என்ற முஸ்லிம்தான் ‘ஜெய் ஹிந்த்’ முழக்கத்தை முதலில் எழுப்பினார்.

  • இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும் என்று கூறும் சங்பரிவார் தலைவர்கள், இத்தகைய வரலாறுகளை அறிய வேண்டும்.

மலப்புரம், மார்ச். 25

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்தப்பட்ட 4-வது கண்டன பொதுக்கூட்டம் மலப்புரத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், “நாட்டின் வரலாறு மற்றும் சுதந்திர இயக்கத்தில் முஸ்லிம் ஆட்சியாளர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் முக்கிய பங்கை ஆற்றியுள்ளனர்.

இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சில சங்பரிவார் தலைவர்கள், எதிரில் அமர்ந்திருந்தவர்களிடம், ‘பாரத மாதா கி ஜே’ கோஷம் எழுப்பும்படி கூறினர். ஆனால், அந்த முழக்கத்தை உருவாக்கியவர் யார்? அவர் பெயர் அஜிமுல்லா கான் என்பது சங் பரிவார்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை.

இதையும் படியுங்கள் : ஐபிஎல் கிரிக்கெட் : மும்பை அணி தோல்விக்கு ஹர்திக் பாண்ட்யா எடுத்த முடிவுதான் காரணம் – இர்பான் பதவி விமர்சனம்

இந்த முழக்கத்தை உருவாக்கியவர் ஒரு முஸ்லிம் என்பதால் அவர்கள் அதை பயன்படுத்துவதை நிறுத்துவார்களா என்பது எனக்கு தெரியாது.அதேபோல் அபித் ஹசன் என்ற முஸ்லிம்தான் ‘ஜெய் ஹிந்த்’ முழக்கத்தை முதலில் எழுப்பினார்.

முகலாயப் பேரரசர் ஷாஜகானின் மகன் தாரா ஷிகோ என்பவர் தான் 50-க்கும் மேற்பட்ட உபநிஷதங்களை சமஸ்கிருதத்தில் இருந்து பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார். இந்திய படைப்புகள் உலகின் பல பகுதிகளுக்கும் செல்ல உதவியாக அவர் இருந்தவர்.

இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும் என்று கூறும் சங்பரிவார் தலைவர்கள், இத்தகைய வரலாறுகளை அறிய வேண்டும். நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடியதில் முஸ்லிம்களுக்கும் பெரும் பங்குண்டு” என்று பினராயி விஜயன் தெரிவித்தார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்