Wednesday, December 18, 2024

ஐ.டி.கே. கல்விச்சேவை நிறுவன தலைவர் டாக்டர் ஜோசப்பிற்கு ‘ஸ்கின்’ சாதனையாளர் விருது 

ஐ.டி.கே. கல்விச்சேவை நிறுவன தலைவர் டாக்டர் ஜோசப்பிற்கு ‘ஸ்கின்’ சாதனையாளர் விருது 

 ‘SKIN’ Achievement Award to Dr. Joseph, Head of ITK Educational Services

புதுச்சேரி, அக். 01

புதுச்சேரி தொழில்துறை வல்லுநர்களின் அறிவுசார் குழுமம் சார்பில், கல்வி, விளையாட்டு, தொழில், சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சாதனையாளர்களுக்கு ‘ஸ்கின்’ விருது வழங்கப்பட்டது.

புதுச்சேரி ஓட்டல் அதிதியில் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

Skin Award
Skin Award

நிகழ்ச்சியில் கல்வித்துறையில் சாதனைபடைத்துவரும் சென்னை ஐ.டி.கே. கல்விச்சேவை நிறுவன ( ITK Education Services Pvt Ltd) தலைவரும், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் இயக்குநர்கள் சங்கத்தின் (AOBOOA- ALL OMNI BUS OWNERS & OPERATORS ASSOCIATION-Tamil Nadu) கவுரவ ஆலோசகருமான டாக்டர் ஜோசப்பிற்கு, சிறந்த சாதனையாளருக்கான ‘ஸ்கின்’ விருது வழங்கப்பட்டது.

இதேபோன்று பழைய கலை பொருட்களை சேகரித்து, வீட்டினை மியூசியமாக மாற்றியுள்ள புதுச்சேரியை சேர்ந்த ஊர்க்காவல் படை சப் இன்ஸ்பெக்டர் கேசவன், மாடலிங் துறையில் சாதித்துவரும் சேன் ரேச்சல் காந்தி, பைக் சாகச வீராங்கனை லேனி செனா பெர்னாண்டஸ், தேசிய பளு துாக்கும்போட்டியில் வெள்ளிபதக்கம் வென்ற பளு துாக்கும் வீராங்கனை ஹர்ஷிகா உள்ளிட்ட 30 பேர் விருது பெற்றனர்.

Skin Award
Skin Award

புதுச்சேரி தொழில்துறை வல்லுநர்களின் அறிவுசார் குழும நிறுவனர்கள் ராஜா, அருள், சந்தோஷ்குமார், இயக்குனர் சூரியபிரகாஷ் விருது வழங்கி பாராட்டினர்.

Related Articles

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -spot_img

Latest Articles