Home உலகம் உலகத்தர கல்வி பயில, தமிழக உயர் கல்வி நிறுவனங்களுக்கு மலேஷியா சுற்றுலாத்துறை அழைப்பு

உலகத்தர கல்வி பயில, தமிழக உயர் கல்வி நிறுவனங்களுக்கு மலேஷியா சுற்றுலாத்துறை அழைப்பு

0
உலகத்தர கல்வி பயில, தமிழக உயர் கல்வி நிறுவனங்களுக்கு மலேஷியா சுற்றுலாத்துறை அழைப்பு
Oplus_131072

உலகத்தர கல்வி பயில, தமிழக உயர் கல்வி நிறுவனங்களுக்கு மலேஷியா சுற்றுலாத்துறை அழைப்பு

Malaysia Tourism invites Tamil Nadu higher education institutions to pursue world-class education

சென்னை, பிப். 28

சென்னை நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் சாலையில் அமைந்துள்ள மலேஷிய சுற்றுலாத்துறை அலுவலகத்தில், வியாழன் (27-ந் தேதி) காலை “ஸ்டடி மலேஷியா அகாடமிக் கனெக்ட் 2025” சிறப்பு கருத்துகூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்டடி மலேஷியா மற்றும் ஐ.டி.கே. சர்வதேச கல்விச்சேவை நிறுவனத்துடன் இணைந்து மலேஷிய சுற்றுலாத்துறை நடத்திய நிகழ்விற்கு தென்னிந்தியா மற்றும் இலங்கைக்கான மலேஷிய சுற்றுலாத்துறை இயக்குநர் ஹிஷாமுத்தீன் முஸ்தபா தலைமை தங்கினார். டூரிஸம் மலேஷியா வர்த்தக அதிகாரி சைய்யது வரவேற்று பேசினார்.

Oplus_131072

ஐ.டி.கே. எஜூகேஷன் குரூப் ஆப் கம்பெனிஸ் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ஜோசப் பேசும்போது,  தமிழ்நாட்டு மாணவர்கள் சர்வதேச உயர் கல்வி பெற வேண்டியதின் அவசியம் மற்றும் வாய்ப்புகள் குறித்து குறிப்பிட்டார்.

ஸ்டடி மலேஷியா சென்னை நிறுவன இயக்குநர் திரு பேசும்போது, மலேஷியாவில் உள்ள பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்கள், சர்வதேச பல்கலைக்கழகங்களில் தமிழக மாணவர்களுக்கான உயர் கல்வி வாய்ப்புகள் குறித்து விவரித்தார்.

Oplus_131072

நிகழ்ச்சியில் பெத்தேல் குரூப் ஆப் இன்ஸ்டிடியூசன்ஸ் இயக்குநர் தோறீன் ராபின்,  ஆரோ எஜூகேஷன் சி.இ.ஓ. மாலதி, விநாயகா மிஷின் ரிசர்ச் பவுண்டேஷன் டீன் டாக்டர் மார்த்தா கிரிசில்டா, எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி பேராசிரியர் டாக்டர் மினு, சத்தியபாமா இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி பேராசிரியர் டாக்டர் நாகராஜன், க்ரீன்பீல்ட் இன்டர்நேஷனல் ஸ்கூல் சி.இ.ஓ. டாக்டர் ஆலயம்மாள் மேத்தியூ, முஹம்மது சதக் என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் சீனிவாசன், முஹம்மது சதக் என்ஜினீயரிங் கல்லூரி இயக்குநர் விக்னேஷ், பெண்கள் கிறிஸ்டின் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஷாஜினி ஜூடித் டயானா, பெண்கள் கிறிஸ்டின் கல்லூரி பேராசிரியர் ஏஞ்சலினா ஸ்ரீதேவி, சாய் ராம் இன்ஜினியரிங் இயக்குநர் (புதுமை) டாக்டர் ரினே ராபின், புதிய பரிமாணம் டிவி நிறுவனர், ஆசிரியர் புஹாரி ஷரீப் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Oplus_131072

நிகழ்வில் தலைமையுரையாற்றிய மலேஷிய சுற்றுலாத்துறை இயக்குநர் ஹிஷாமுதீன் முஸ்தபா, மிக குறைந்த கட்டணத்தில் தமிழக மாணவர்கள் உயர் கல்வி கற்க விருப்பமான இடமாக மலேஷியா திகழ்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிகழ்ச்சி மூலம் தமிழக கல்வி நிறுவனங்களுடனான புரிதல்கள் வலுவடைந்துள்ளது.

வரும் கல்வியாண்டில் மலேஷிய உயர்கல்வி கட்டமைப்புகள், மாணவர்களுக்கான கல்வி பயணக்குழு திட்டங்கள், சலுகைகள், கலாச்சார புரிதல் ஏற்படும் வகையில் தமிழக கல்வி நிறுவன பிரதிநிதிகள் குழுவை மலேஷியாவிற்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

Oplus_131072

நிகழ்ச்சிக்கான ஏற்பாடு மற்றும் ஒருங்கிணைப்பை பாராட்டி மலேஷிய சுற்றுலாத்துறை இயக்குநர் ஹிஷாத்தீன் முஸ்தபா, ஐ.டி.கே. சர்வதேச கல்விச்சேவை நிறுவன சி.இ. ஓ. டாக்டர் ஜோசப்பிற்கு சுற்றுலாத்துறை சிறப்பு மெமண்டோ வழங்கி கவுரவித்தார்.

Oplus_131072

2026 ஆண்டுக்கான மலேஷிய சுற்றுலாத்துறையின் வீரா மற்றும் மஞ்சா என்ற இரு சூரிய கரடியின் புதிய லோகோவை இயக்குநர் ஹிஷாத்தீன் முஸ்தபா வெளியிட, ஐ.டி.கே. குரூப் கம்பெனி நிறுவனர் டாக்டர் ஜோசப் பெற்றுக்கொண்டர்.

முடிவில் நிகழ்ச்சியில்  அனைத்து கல்வி நிறுவன பிரதிநிதிகளுக்கு பதக்கம் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.