-
அதானி நிறுவனத்தின் மொத்த ஜி.எஸ்.டி.யும் வரிகடன் மூலம் நேர் செய்யப்பட்டதாகவும், பணமாக வழங்கவில்லை என்றும் அதிகாரி குற்றச்சாட்டு
சிம்லா, பிப்.10
இமாசல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்துக்கு உட்பட்ட பர்வானுவில் அதானிக்கு சொந்தமான அதானி வில்மர் குடோன் உள்ளது. மாநிலத்தில் சமையல் எண்ணெய், அரிசி, கோதுமை மாவு, சர்க்கரை போன்ற சமையல் பொருட்களை இந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
இந்த நிறுவனம் ஜி.எஸ்.டி. முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளதாக புகார் எழுந்தது.2017 ம் ஆண்டிலும் இதே போல் சுமார் ரூ .1000 கோடி வரி ஏய்பு சோதனை நடந்ததாக கூறப்படுகிறது .
இதைத்தொடர்ந்து குடோனில் மாநில கலால் வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது நிறுவனத்தின் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டதுடன், அங்குள்ள இருப்புகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதையும் படியுங்கள் : விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி- டி2 ரக ராக்கெட்
எனினும் இது வழக்கமான சோதனைதான் என கலால் வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதானி நிறுவனத்தின் மொத்த ஜி.எஸ்.டி.யும் வரிகடன் மூலம் நேர் செய்யப்பட்டதாகவும், பணமாக வழங்கவில்லை என்றும் அதிகாரி ஒருவர் குற்றச்சாட்டு தெரிவித்தார்.
இந்த சோதனை வழக்கமானது என அதானி நிறுவனமும் தெரிவித்து உள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழும விவகாரம் இந்திய அரசியலின் மையப்புள்ளியாக மாறியிருக்கும் இந்த நேரத்தில் இமாசல பிரதேசத்தில் நடந்த இந்த சோதனை சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.