மதுரையில் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் பா.சரவணன் அமைச்சர் செல்லூர் ராஜூவுடன் தீவிர வாக்கு சேகரிப்பு
ADMK Candidate Dr. P. Saravanan with Minister Sellur Raju intensive vote collection in Madurai
-
10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது மதுரைக்கு ரூ.7,000 கோடி அளவில் செய்யப்பட்ட திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார் மக்களின் மருத்துவர் டாக்டர் பா.சரவணன்
-
சி.பி.எம். பாராளுமன்ற உறுப்பி்னர் சு.வெங்கடேசன் கொண்டு வந்த திட்டங்கள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை எனவும் பேசினார்
மதுரை, ஏப். 03
மதுரை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் மக்களின் மருத்துவர் டாக்டர் பா.சரவணன் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுடன் தொகுதிக்கு உட்பட்ட பல்பேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சோலை அழகுபுரம், ஜெய்ஹிந்த்புரம், ஜீவாநகர், கோவலன் நகர், முத்துப்பட்டி, பழங்காநத்தம், திருவள்ளவர் நகர், மாடக்குளம் ஆகிய பகுதிகளில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர்.
வழியெங்கும் திரண்ட மக்கள் மேளதாளம் முழங்க பூக்களை தூவி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு வரவேற்பு அளித்தனர். மேலும் செல்லும் இடமெல்லாம் உற்சாக வரவேற்பு அளித்து ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு சரவணனை அவர்கள் வாழ்த்தினார்கள்.
இதையும் படியுங்கள் : துரைமுருகனின் மகனும் வேட்பாளருமான கதிர் ஆனந்த் பேச்சை கண்டித்தார் முதல் அமைச்சர் ஸ்டாலின்
அப்போது அவர் 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது மதுரைக்கு ரூ.7,000 கோடி அளவில் செய்யப்பட்ட திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார்.
மதுரையில் நடைபெறுகிற மக்களவைத் தேர்தல் உண்மைக்கும் பொய்க்கும் நடைபெறும் தேர்தல் எனவும், சி.பி.எம். பாராளுமன்ற உறுப்பி்னர் சு.வெங்கடேசன் கொண்டு வந்த திட்டங்கள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை எனவும் பேசினார்.
பிரசாரத்தில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ். பாண்டியன், ஜெயவேல், பரவை ராஜா, கருப்பசாமி, முத்துவேல், எஸ்.எம்.டி.ரவி, செல்வக்குமார், மைதிலி, இஷிகா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தேமுதிக மாவட்ட செயலாளர் (தெற்கு) மணிகண்டன், அகில இந்திய பார்வர்டு பிளாக் சிவபாண்டி, பசும்பொன், எஸ்.டி.பி.ஐ. பிலால் மைதீன் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்