Tuesday, April 23, 2024

தமிழகத்தில் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை – தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு 

தமிழகத்தில் 8050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை – தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு 

8,050 polling booths are tense in Tamil Nadu – Chief Electoral Officer Sathyaprada Sahu

  • திருச்சி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் வீடுகளுக்கேச் சென்று தபால் வாக்குகளை பெறும் பணி தொடங்கி உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் 18-ம் தேதிக்குள் தபால் வாக்குக்களை பெற வேண்டும்

  • ரோடு ஷோ நிகழ்ச்சிகளை, நடத்த தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். இதில் பிரதமருக்கு சில விதி விலக்கு

சென்னை, ஏப். 04

தமிழகத்தில் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்றும், 181 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாஹு சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இதையும் படியுங்கள் : மதுரையில் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் பா.சரவணன் அமைச்சர் செல்லூர் ராஜூவுடன் தீவிர வாக்கு சேகரிப்பு

அப்போது அவர் கூறியது: “திருச்சி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் வீடுகளுக்கேச் சென்று தபால் வாக்குகளை பெறும் பணி தொடங்கி உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் 18-ம் தேதிக்குள் தபால் வாக்குக்களை பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தபால் வாக்குகளை வாங்க முதல்முறை வீடுகளுக்குச் செல்லும்போது வாக்காளர்கள் வீட்டில் இல்லை என்றால், இரண்டாவது முறை அவர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் செல்வார்கள். இரண்டு முறை மட்டுமே தபால் வாக்கு பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்படும். ‘சுவிதா’ செயலி மூலம் வேட்பாளர்கள் தங்களுக்கு தேவையான பல்வேறு அனுமதிகளைப் பெறலாம். இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.இதுதவிர்த்து மற்ற நிகழ்வுகளுக்கு ஏற்கெனவே உள்ள நடைமுறைதான் பின்பற்றபடுகிறது.

8,050 polling booths are tense in Tamil Nadu - Chief Electoral Officer Sathyaprada Sahu
8,050 polling booths are tense in Tamil Nadu – Chief Electoral Officer Sathyaprada Sahu

தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் அண்டை மாநிலங்களுடன் ஒருங்கிணைத்து செயல்படுவது தொடர்பாக, புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் அறிவுறுத்தினார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே பூத் ஸ்லிப் வழங்கப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படாது. இதுவரை 13.08 லட்சம் பூத் சீலிப் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 68,321 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை. 181 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. ரோடு ஷோ நிகழ்ச்சிகளை, நடத்த தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். இதில் பிரதமருக்கு சில விதி விலக்கு உள்ளது” என்று அவர் கூறினார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

Related Articles

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -spot_img

Latest Articles