
எண்ணூர் உர ஆலையில் அமோனியா வாயு கசிவு : 10 மீனவ கிராம மக்கள் மூச்சுதிணறல் – மயக்கம்
Ammonia Gas Leak at Ennore Fertilizer Plant: 10 Fisherman Villagers Asphyxiated – Fainted
-
அமோனியா வாயுவை சுவாசித்த எண்ணூரை சுற்றி உள்ள 10 மீனவ கிராமமக்கள் மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டனர்.
-
வாயு கசிந்த உடன் அருகில் உள்ள பொதுமக்களை வாகனங்கள் மூலம் வெளியேற்றி பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்று இருக்கலாம் எனவும், நிலைமையின் வீரியத்தை தெரிவித்து இருக்கலாம் என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
சென்னை, டிச. 29
எண்ணூர் கடலில் எண்ணெய் கழிவு கலந்த விவகாரம் முடியாத நிலையில் உரத்தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு கசிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமோனியா வாயுவை சுவாசித்த எண்ணூரை சுற்றி உள்ள 10 மீனவ கிராமமக்கள் மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டனர். தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு கசிந்த உடன் நிர்வாகத்தினர் அபாய ஒலி எழுப்பி சுற்றி உள்ள கிராமக்ககளை எச்சரிக்கை செய்யாதது ஏன்? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதையும் படியுங்கள் : நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி பாஜகவை எதிர்கொள்ளும் – திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி
மேலும் வாயு கசிந்த உடன் அருகில் உள்ள பொதுமக்களை வாகனங்கள் மூலம் வெளியேற்றி பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்று இருக்கலாம் எனவும், நிலைமையின் வீரியத்தை தெரிவித்து இருக்கலாம் என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
அமோனியா வாயுவால் மயக்கம் அடைந்த பின்னரே இதுபற்றி வெளியே தெரியவந்தது. மக்களின் உயிரோடு தொழிற்சாலை நிறுவனங்கள் விளையாடக்கூடாது என்று பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.