
அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டணம் உயர்வா ?
anna university exam fees hike ?
-
டிகிரி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1,500 உயர்த்தப்பட்டுள்ளது.
-
இறுதியாண்டு மாணவர்கள் ப்ராஜெக்ட் செய்வதற்கு 600 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் 900 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை, நவ. 17
அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டணம் 50 சதவீதம் அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்வு கட்டணமாக ஒரு தாளுக்கு ரூ.150 பெறப்பட்டு வந்த நிலையில், தற்போது 225 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது 50 சதவீதம் அதிகமாகும்.
ஒரு செமஸ்டருக்கு 9 தாள்கள் தேர்வு எழுத வேண்டி உள்ளதால் ரூ. 2,050 கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. டிகிரி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1,500 உயர்த்தப்பட்டுள்ளது. இறுதியாண்டு மாணவர்கள் ப்ராஜெக்ட் செய்வதற்கு 600 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் 900 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் கேட்டபோது, “வரும் செமஸ்டரில் இந்த கட்டண உயர்வு கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.