Home செய்திகள் அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ; மேலும் 3 எம்.பி.க்கள் இடைநீக்கம்

அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ; மேலும் 3 எம்.பி.க்கள் இடைநீக்கம்

0
அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ; மேலும் 3 எம்.பி.க்கள் இடைநீக்கம்
Budget Session of Parliament: Union Budget for 2025-26 to be presented tomorrow 

மக்களவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ; மேலும் 3 எம்.பி.க்கள் இடைநீக்கம்

Another three MPs suspended from parliament for their activities

  • மக்களவையில் போராட்டம் நடத்தக் கூடாது என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் டி.கே.சுரேஷ், தீபக் பைஜ் மற்றும் நகுல்நாத் ஆகியோருக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

  • மக்களவையில் இருந்து டி.கே.சுரேஷ், நகுல்நாத், தீபக் பைஜ் உள்ளிட்ட 3 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் நடவடிக்கை

புது டெல்லி, டிச. 21

டிசம்பர் 13ம் தேதி அன்று மக்களவையில் இரண்டு பேர், கலர் புகை குண்டு வீசினர். இதுதொடர்பாக, பாதுகாப்பு மீறல் குறித்து அமித்ஷாவிடம் இருந்து அறிக்கை கோரி எதிர்க்கட்சிகள் சபை நடவடிக்கைகளை சீர்குலைத்து வருகின்றனர். இதையடுத்து, சபாநாயகர் எடுத்த நடவடிக்கையால் கடந்த டிசம்பர் 14ம் தேதி முதல் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 143 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இன்று மீண்டும் பாராளுமன்றத்தில் சபை கூடியதும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள், சபையில் இருந்து எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாராளுமன்ற பாதுகாப்பு மீறல் விவகாரம் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அறிக்கை
குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதையும் படியுங்கள்: மிமிக்ரி விவகாரம் | ராகுல் காந்தி மற்றும் கல்யாண் பானர்ஜி மீது வழக்குப்பதிய பா.ஜ.க. மந்திரி கோரிக்கை

அப்போது, மக்களவையில் போராட்டம் நடத்தக் கூடாது என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் டி.கே.சுரேஷ், தீபக் பைஜ் மற்றும் நகுல்நாத் ஆகியோருக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று எச்சரிக்கை விடுத்திருந்தார். கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷங்கள் எழுப்பினர். கேள்வி நேரம் முடிந்ததும், சபாநாயகர் போராட்டம் நடத்திய உறுப்பினர்களை எச்சரித்து, மூன்று காங்கிரஸ் எம்.பி.க்களின் பெயரையும் கூறினார்.

அப்போது, “நான் எந்த ஒரு எம்.பி.யையும் காரணமின்றி சஸ்பெண்ட் செய்யவில்லை. நீங்கள் சபையில் காகிதங்களை கிழித்து வீசுகிறீர்கள். எம்.பி.க்கள் என்னிடம் வந்து சஸ்பெண்ட் செய்யச் சொல்கிறார்கள். நான் யாரையும் சஸ்பெண்ட் செய்ய விரும்பவில்லை, ஆனால் நீங்கள் சபையில் பிளக்ஸ் பேனர்களை கொண்டு வருகிறீர்கள். இது சரியல்ல” என்றார். இறுதியில், மக்களவையில் இருந்து டி.கே.சுரேஷ், நகுல்நாத், தீபக் பைஜ் உள்ளிட்ட 3 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இதுவரை 146 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.