Thursday, December 19, 2024

ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவு : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் 

  • ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் 

  • ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் மனோஜ் பாண்டியன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோரும் இருந்தனர்.

சென்னை, மார்ச். 17

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (வயது95). வயது முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 2-ந் தேதி காலமானார்.

அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள்,முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் பலரும் இரங்கலை தெரிவித்தனர். இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: தமிழ்நாடு மகளிர் காவல்துறை பொன்விழா: பெண் காவலர்களுக்கு இரண்டு சல்யூட் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்திற்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் கூறினார். அவருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு சென்றிருந்தனர்.

ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் மனோஜ் பாண்டியன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோரும் இருந்தனர்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.

Related Articles

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -spot_img

Latest Articles