Home செய்திகள் அவதூறு வழக்கு : ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை – உடனடி ஜாமீன்

அவதூறு வழக்கு : ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை – உடனடி ஜாமீன்

0
அவதூறு வழக்கு : ராகுல் காந்திக்கு  2 ஆண்டுகள் சிறை தண்டனை – உடனடி ஜாமீன்
raghul gandhi from court

அவதூறு வழக்கு : ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை – உடனடி ஜாமீன்

Defamation case: Rahul Gandhi sentenced to 2 yrs in jail - immediate bail
  • கர்நாடகா மாநிலம் கோலாரில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி மோடியின் சாதி பெயர் குறித்து பேசியது பெரும் பரபரப்பு

  • சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த அவதூறு வழக்கில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை – உடன் ஜாமீன்

சூரத் , மார்ச் 23

கடந்த 2019 ஆம் ஆண்டு மோடி சாதிப்பெயர் குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உரையாற்றியது தொடர்பாக சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த அவதூறு வழக்கில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உடனே ஜாமீனும் வழங்கப்பட்டு இருக்கிறது.

அவதூறு வழக்கு : ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை – உடனடி ஜாமீன்
அவதூறு வழக்கு : ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை – உடனடி ஜாமீன்

கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலாரில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி மோடியின் சாதி பெயர் குறித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இதையும் படியுங்கள் : அமெரிக்க வணிக மற்றும் சுற்றுலா விசாவில் வேலைக்கும் விண்ணப்பிக்கலாம்

அவதூறு வழக்கு

மோடி என்ற துணை பெயரை குறிப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, இந்த பெயரை துணை பெயராக வைத்து இருப்பவர்கள் எல்லாம்.. என்று ஒரு வார்த்தையை கூறி விமர்சித்து பேசினார்.

இதனை எதிர்த்து குஜராத் முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். சூரத் நீதிமன்றத்தில் சுமார் 4 ஆண்டுகளாக இந்த வழக்கு மீதான விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் சூரத் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா முன்பு விசாரணைக்கு வந்தது.

அவதூறு வழக்கு : ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை – உடனடி ஜாமீன்
Defamation case: Rahul Gandhi sentenced to 2 years in jail – immediate bail

இந்துஸ்தானின் சிங்கம் ராகுல் காந்தி

இந்த வழக்கு விசாரணைக்காக ராகுல் காந்தி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். சூரத் வந்த அவரை வரவேற்று காங்கிரஸ் கட்சியினர் உங்களுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம் என்று கூறி போஸ்டர்களை அடித்து ஒட்டி இருந்தனர். இந்துஸ்தானின் சிங்கம் ராகுல் காந்தி என்று அவர்கள் குறிப்பிட்டு இருந்தனர்.

அவதூறு வழக்கு குற்றவாளி

பாஜகவின் சர்வாதிகாரத்துக்கு காங்கிரஸ் பணியாது என்று அக்கட்சியினர் ராகுல் காந்தி செல்லும் வழி நெடுகிலும் பதாகைகளை ஏந்து நின்று அவருக்கு வரவேற்பு தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியினரின் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் ராகுல் காந்தி சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவர் அவதூறு வழக்கு குற்றவாளி மாஜிஸ்திரேட் தீர்ப்பளித்தார்.

சிறை தண்டனை – ஜாமீன்

இதனை தொடர்ந்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அவருக்கு 30 நாட்கள் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், 30 நாட்களில் அவதூறு வழக்கு தொடர்பாக விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு அனுமதி வழங்கியது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.