Wednesday, December 18, 2024

சவூதி அரேபிய சட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நியமனம் : முதல்வர் ஸ்டாலினுடன் வெளிநாடுவாழ் தமிழ் இந்தியர்கள் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

சவூதி அரேபிய சட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நியமனம் : முதல்வர் ஸ்டாலினுடன் வெளிநாடுவாழ் தமிழ் இந்தியர்கள் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

 Deputy Legal Coordinator Appointed in Saudi Arabia: Executives of Overseas Tamil Indians Association met Chief Minister Stalin

  • வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்க (NRTIA) சவூதி அரேபியா அயலக அணி துணை அமைப்பாளர் முருகதாஸ், வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்க இந்திய-சவூதி அரேபியா தகவல் தொடர்பு அமைப்பாளர்கள் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தனர்

  • ஒருங்கிணைந்த சவுதி அரேபியா தமிழ்ச்சங்க (United Tamil Sangam) நிர்வாகிகள் சவூதி அரேபியாவின் அனைத்துப் பகுதி தமிழ்ச்சங்களின் கூட்டமைப்பான ‘ஒருங்கிணைந்த சவூதி அரேபியா தமிழ்ச் சங்க’த்தின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் விளக்கி பேசினர்.

சென்னை, ஜூலை. 28

சவூதி அரேபியாவின் ரியாத் மாகாணத்தில் வசிப்பவர் வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கத்தின் துணை அமைப்பாளர் டாக்டர் சந்தோஷ் பிரேம் வின்ஃபிரெட். இவரை தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சகம், சவூதி அரேபியாவின் சட்ட துணை ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளது.

 

Deputy Legal Coordinator Appointed in Saudi Arabia: Executives of Overseas Tamil Indians Association met Chief Minister Stalin
Deputy Legal Coordinator Appointed in Saudi Arabia: Executives of Overseas Tamil Indians Association met Chief Minister Stalin

இதனைத்தொடர்ந்து சவூதி அரேபிய சட்ட துணை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சந்தோஷ் பிரேம் வின்ஃபிரெட் தலைமையில், வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்க (NRTIA) சவூதி அரேபியா அயலக அணி துணை அமைப்பாளர் முருகதாஸ், வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்க இந்திய-சவூதி அரேபியா தகவல் தொடர்பு அமைப்பாளர்கள் சாகுல் ஹமீது, லாபின், அமீர் அலி ஆகியோர் அடங்கிய குழு தமிழகம் வந்தது.

அவர்கள் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதுடன், நினைவு பரிசுகள் வழங்கி நன்றி தெரிவித்தனர்.Deputy Legal Coordinator Appointed in Saudi Arabia: Executives of Overseas Tamil Indians Association met Chief Minister Stalin

தொடர்ந்து சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை நேரில் சந்தித்து, தம்மை சவூதி அரேபியாவின் சட்ட துணை ஒருங்கிணைப்பாளராக நியமித்ததற்காக டாக்டர் சந்தோஷ் பிரேம் வின்ஃபிரெட் பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் ஒருங்கிணைந்த சவுதி அரேபியா தமிழ்ச்சங்க (United Tamil Sangam) நிர்வாகிகள் முனைவர் நாகராஜன் கணேசன் மற்றும் முருகதாஸ் ஆகியோர், சவூதி அரேபியாவின் அனைத்துப் பகுதி தமிழ்ச்சங்களின் கூட்டமைப்பான ‘ஒருங்கிணைந்த சவூதி அரேபியா தமிழ்ச் சங்க’த்தின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் விளக்கி பேசினர்.

 Deputy Legal Coordinator Appointed in Saudi Arabia
Deputy Legal Coordinator Appointed in Saudi Arabia

அப்போது சவூதி அரேபியாவில் வாழும் தமிழர்கள் நலன் மற்றும் இறந்த தொழிலாளர்களின் உடல்களை தாயகம் அனுப்புவது தொடர்பான முக்கியப் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. வெளிநாடுவாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த சவூதி அரேபிய தமிழ்ச்சங்க நிர்வாகிகளின் இந்த சந்திப்பு குறித்த தகவலை ஒருங்கிணைந்த சவூதி அரேபிய தமிழ்ச்சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் எம். சிராஜுதீன் தெரிவித்தார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

Related Articles

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -spot_img

Latest Articles