Home உலகம் சீனாவில் கட்டுப்பாடுகள் நீக்கம் ; மீண்டும் விசா அனுமதி

சீனாவில் கட்டுப்பாடுகள் நீக்கம் ; மீண்டும் விசா அனுமதி

0
சீனாவில் கட்டுப்பாடுகள் நீக்கம் ; மீண்டும் விசா அனுமதி
  • ஷாங்காய் நகரில் நிறுத்தப்பட்டு பயணிகள் கப்பல்களில் இருப்பவர்களுக்கு குவாங்டாங் மாகாணத்தில் விசா இல்லாத நுழைவு மீண்டும் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

  • வெளிநாட்டு பயணிகளுக்கு நாளை முதல் மீண்டும் விசா வழங்கும் பணி தொடங்கும் என்று சீனா தெரிவித்துள்ளது.

பீஜிங், மார்ச்.14

சீனாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. வெளிநாட்டு பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

தற்போது கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வெளிநாட்டு பயணிகளுக்கு நாளை முதல் மீண்டும் விசா வழங்கும் பணி தொடங்கும் என்று சீனா தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : பல்லவன் இல்லம் முன்பு சிஐடியூ தொழிலாளர்கள் கூட்டம்

இதுதொடர்பாக அமெரிக்காவில் உள்ள சீன தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், சுற்றுலா பயணிகள் மற்றும் பிற வெளிநாட்டினருக்கு விசா வழங்குவது நாளை (15-ந்தேதி) முதல் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் ஆங்காய், மக்காவ்விலிருந்து வரும் வெளிநாட்டினர், ஷாங்காய் நகரில் நிறுத்தப்பட்டு பயணிகள் கப்பல்களில் இருப்பவர்களுக்கு குவாங்டாங் மாகாணத்தில் விசா இல்லாத நுழைவு மீண்டும் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.