
இயக்குநர் நந்தா பெரியசாமிக்கு ‘பேனா முனை’ விருது : ஐடிகே. நிறுவனம் வழங்கி கவுரவிப்பு
Director Nanda Periyasamy honored with ‘Pena Munai’ award
சென்னை, பிப். 08
இந்திய மாணவர்களுக்கு மென்பொருள் தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச நாடுகளில் உயர் கல்வி வாய்ப்புகளை உருவாக்கி தரும் சிறந்த நிறுவனம் ஐடிகே எஜூகேஷன் சர்வீஸ் பி.லிட்.

இந்த ஐடிகே. நிறுவனம், மகளிர் தினத்தை சென்னை ஆழ்வார்திருநகர் பிளாக் பாரெஸ்ட் ரெஸ்டாரண்ட்டில் கொண்டாடியது. நிகழ்வில் பல்வேறு துறையில் சாதனை படைத்த பெண்கள் பாராட்டப்பட்டனர். கேக் வெட்டி மகிழ்ந்தனர்.

நிகழ்ச்சியில் அண்மையில் வெளிவந்து மக்கள் மனங்களை கொள்ளை கொண்ட திரு.மாணிக்கம் திருப்படத்தை இயக்கிய இயக்குநர் நந்தா பெரியசாமிக்கு, ஐடிகே நிறுவனம், “மக்கள் எழுத்தாளர் 2025” விருது வழங்கி கவுரவித்தது.

இந்த விருதை சாய்ராம் என்ஜினீயரிங் கல்லூரி டீன் (புதுமை) Dr. ரெனே ராபின் வழங்க, நந்தா பெரியசாமி பெற்றுக்கொண்டார். ஐடிகே தலைவர் Dr. ஜோசப், தான் வரைந்த வாழ்த்து மடலை வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் விநாயகா மிஷின் ஆராய்ச்சி அறக்கட்டளை டீன் மார்த்தா கிரிசில்டா, ஸ்டடி மலேஷியா திருமாவளவன், முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் சீனிவாசன், பெத்தேல் பள்ளி தலைவர் டோறீன் ராபின், மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி பேராசிரியர்கள் ஷாஜினி, ஏஞ்சலின், கிறீன்பீல்டு சென்னை இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் அலெயம்மா மாத்தியூ, முதல்வர் சந்தியா பிரதீப், புதிய பரிமாணம் தொலைக்காட்சி நிறுவனர் புஹாரி ஷரீஃப், தொழில் அதிபர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.