Home செய்திகள் ஆழ்கடலுக்குள் சென்ற மீனவர்கள் 26-ந்தேதிக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் |சென்னை வானிலை ஆய்வு மையம்

ஆழ்கடலுக்குள் சென்ற மீனவர்கள் 26-ந்தேதிக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் |சென்னை வானிலை ஆய்வு மையம்

0
ஆழ்கடலுக்குள் சென்ற மீனவர்கள் 26-ந்தேதிக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் |சென்னை வானிலை ஆய்வு மையம்
the regional meterological dept

ஆழ்கடலுக்குள் சென்ற மீனவர்கள் 26-ந்தேதிக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் |சென்னை வானிலை ஆய்வு மையம்

Fishermen ventured into the deep sea should return by 26 | chennai metrological Department

  • தமிழகத்தில் தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்த போதிலும் வட மாவட்டங்களில் போதுமான அளவு மழை பொழிவு இல்லை.

  • தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதாவது 27-ந் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை, நவ. 22

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்து உள்ள நிலையில் இயல்பான அளவைவிட குறைவாகவே மழை பெய்து உள்ளது.

வழக்கமாக நவம்பர் மாதத்தில் சராசரியாக பெய்ய வேண்டிய மழை அளவைவிட குறைவாகவே பெய்துள்ளது.
வங்கக்கடலில் ஒரே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தீபாவளிக்கு முன்பு மழை பெய்தது.

தமிழகத்தில் தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்த போதிலும் வட மாவட்டங்களில் போதுமான அளவு மழை பொழிவு இல்லை. வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.

இந்த நிலையில் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு-மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதாவது 27-ந் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று (22-ந்தேதி) அநேக இடங்களில் மழை பெய்யும். ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதையும் படியுங்கள் : தமிழக அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. 15 இடங்களில் கனமழையும், 5 இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில் மிக கன மழை பெய்யும்.

டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வருகிற 26-ந்தேதி அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும். ஆழ்கடலுக்குள் சென்ற மீனவர்கள் 26-ந்தேதிக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் என்று எச்சரிக்கப்படுகிறார்கள். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறினார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.