Home இந்தியா தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை எச்சரிக்கை – இந்திய வானிலை ஆய்வு மையம்

தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை எச்சரிக்கை – இந்திய வானிலை ஆய்வு மையம்

0
தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை எச்சரிக்கை – இந்திய வானிலை ஆய்வு மையம்
Again 3 days heavy rainfall alert in southern districts

தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை எச்சரிக்கை – இந்திய வானிலை ஆய்வு மையம்

Heavy rainfall alert in southern districts – Indian meterological research centre

  • தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இன்னும் முழுமையாக இயல்பு நிலை திரும்பவில்லை. ஒரு சில பகுதிகளில் மழை வெள்ளம் வடியவில்லை. அரசு எந்திரம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.

  • அனைத்து துறை அதிகாரிகள், ஊழியர்கள் 30, 31 மற்றும் 1-ந் தேதிகளில் அலுவலகங்களில் இருக்க வேண்டும். யாரும் விடுப்பு எடுக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகள், அணைகளை தீவிரமாக கண்காணிக்குமாறு பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, டிச. 29

தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால் மக்கள் வீடு, உடமைகளை இழந்து பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இன்னும் முழுமையாக இயல்பு நிலை திரும்பவில்லை. ஒரு சில பகுதிகளில் மழை வெள்ளம் வடியவில்லை. அரசு எந்திரம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.

மக்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்.

வருகிற 31-ந் தேதி (ஞாயிற்றுக்கிழை) மதியம் 1-ந் தேதி ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யும்.
நாளை (30-ந் தேதி) தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

இதையும் படியுங்கள் : வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி. மக்கள் மனதில் நின்றவர் யார்?  வாழ்க விஜயகாந்த் நாமம்” – ரஜினிகாந்த் புகழஞ்சலி

31-ந் தேதி மற்றும் 1-ந் தேதி தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டு இருப்பதால் மாவட்ட நிர்வாகங்கள் உஷார் நிலையில் உள்ளன.

வானிலை ஆய்வு மையத்தின் தகவலை தொடர்ந்து 4 மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மை வீரர்கள், தீயணைப்பு வீரர்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள், முன் எச்சரிக்கை நட வடிக்கையில் ஈடுபட தயாராக இருக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

அனைத்து துறை அதிகாரிகள், ஊழியர்கள் 30, 31 மற்றும் 1-ந் தேதிகளில் அலுவலகங்களில் இருக்க வேண்டும். யாரும் விடுப்பு எடுக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகள், அணைகளை தீவிரமாக கண்காணிக்குமாறு பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மீண்டும் வெள்ள பாதிப்பு ஏற்படுமோ என்ற பயம் நிலவுகிறது. ஆனால் அத்தகைய நிலை ஏற்படுமானால் தடுக்க அனைத்து முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.