தமிழகத்தில் கனமழை | பள்ளிகளுக்கு விடுமுறை
heavy rainfall in tamilnadu | schools leave
-
தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
-
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்
சென்னை, நவ. 04
சென்னை உள்பட பலமாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை: வடகிழக்கு பருவமழை காரணமாக இன்று தமிழகத்தில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்தது. மேலும், ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்து விட்டுவிட்டு கனமழை பெய்து வந்தது.
இதையும் படியுங்கள் : பாகிஸ்தானில் காவல்துறை மீது குண்டு வீச்சு | 5 பேர் பலி ,20 பேர் படுகாயம்
ஆனால், இன்று காலை முதல் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.