Home செய்திகள் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூல் ; வரைமுறை படுத்த மார்ச் 31 வரை காலக்கெடு

ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூல் ; வரைமுறை படுத்த மார்ச் 31 வரை காலக்கெடு

0
ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூல் ; வரைமுறை படுத்த மார்ச் 31 வரை காலக்கெடு
Higher fares in omni buses ; Tamil Nadu Govt raid

ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூல் ; வரைமுறை படுத்த மார்ச் 31 வரை காலக்கெடு

High fare collection in omni buses; Deadline for submission is March 31

  • விதிமுறைகளை மீறக்கூடாது, அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு ஒவ்வொருமுறையும் எச்சரித்தபடியே உள்ளது. ஆனாலும், கட்டண கொள்ளை அதிகரித்து வருகிறது. கடந்த ஆயுத பூஜை விடுமுறையிலும் இதுபோலவே, அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது

  • மொத்தம் 8,635 பஸ்கள் சோதனை செய்யப்பட்டதில், 119 பஸ்களை சிறை பிடித்தனர். 2,092 பேருந்துகளுக்கு ரூ.37 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கையானது, ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை தந்தது.

சென்னை, ஜன. 23

ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, தமிழக அரசு அதிரடி சோதனையை மேற்கொண்டுள்ளது.

பொங்கல் பண்டிகை, புத்தாண்டு, ஆயுதபூஜை, தீபாவளி போன்ற பண்டிகை விடுமுறை நாட்களில், ஆம்னி பஸ்களில் கட்டணங்கள் அதிகரித்து விடுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொரு முறையும், பண்டிகை சமயத்தில், ஆம்னி பஸ்களின் கட்டணத்தை பார்த்து பொதுமக்கள் கலங்குவதும், அரசுக்கு கோரிக்கை விடுப்பதும் இயல்பாகிவிட்டது.

ஆம்னி பஸ்களில் அதிரடி சோதனை

எனவே, விதிமுறைகளை மீறக்கூடாது, அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு ஒவ்வொருமுறையும் எச்சரித்தபடியே உள்ளது. ஆனாலும், கட்டண கொள்ளை அதிகரித்து வருகிறது.
கடந்த ஆயுத பூஜை விடுமுறையிலும் இதுபோலவே, அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. எனவே, தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் துறையினர், பரவலாக ஆம்னி பஸ்களில் அதிரடி சோதனை நடத்தி, கட்டணங்களில் விதிமீறல் நடந்ததையும் கண்டுபிடித்தனர்.

இதையும் படியுங்கள் : தென்கொரிய தமிழர் முனைவர் ஆரோக்கியராஜுக்கு விருது : புதுவை பள்ளி நண்பர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டம்

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை

மொத்தம் 8,635 பஸ்கள் சோதனை செய்யப்பட்டதில், 119 பஸ்களை சிறை பிடித்தனர். 2,092 பேருந்துகளுக்கு ரூ.37 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கையானது, ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை தந்தது. விதிகளை மீறி இயக்கப்படாத ஆம்னி பஸ்களை விடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கையும் விடுத்து, திடீரென ஸ்டிரைக்கையும் அறிவித்தனர்.பிறகு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, வரி கட்டிய பஸ்களை மட்டும் அரசு விடுவித்திருந்தது. இதற்கு பிறகுதான் அந்த விவகாரம் அடங்கியது.

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் 

இதோ இப்போது பொங்கல் பண்டிகையிலும், விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளது ஆம்னி பஸ்கள். இந்த முறை கரெக்ட்டாக பண்டிகை நேரத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை அறிவித்தனர். இதனால் பொதுமக்கள் நிறையவே தவித்துப்போனார்கள். அரசு இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது என்றாலும், இந்த போராட்டத்தை சாக்காக வைத்து, ஆம்னி பஸ்களில் கட்டணம் பன்மடங்கு எகிறிவிட்டது.

ஆம்னி பஸ்களில் பன்மடங்கு கட்டணம் 

இதையடுத்து, தமிழகம் முழுவதும் 15,659 ஆம்னி பஸ்களில் சோதனை செய்யப்பட்டதில் 1,892 பேருந்துகளில் கட்டணம் வசூல் கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மூலம், ரூ. 36.55 லட்சம் வசூலிக்கப்பட்டிருக்கிறதாம்.

அதுமட்டுமல்ல, தமிழகம் முழுவதும் ஜனவரி 10 முதல் 21ம் தேதி வரை சிறப்பு குழுக்கள் மூலம் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பதிவு செய்து தமிழ்நாட்டில் சுமார் 1,000 பஸ்கள் இயங்குகின்றன. மேலும், விதிகளுக்கு புறம்பாக தமிழகத்தில் இயங்கும் ஆம்னி பேருந்துகளை வரைமுறைப்படுத்த காலக்கெடு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்