இந்திய மாணவர்களுக்கு சர்வதேசதர உயர் கல்வி: ஸ்டடி மலேசியாவுடன் ஐ.டி.கே. கல்வி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
International Quality Higher Education for Indian Students: ITK Education Services with Study Malaysia Sign Memorandum of Understanding
சென்னை, நவ. 07
தமிழக மாணவர்கள் ஐ.டி. துறையிலும், டிஜிட்டல் துறையிலும் ஆளுமைமிக்கவர்களாக உருவாக்கும் சாப்ட்வேர், அப்ளிகேஷன்ஸ், மொபைல் அப்’ஸ் என பல்வேறு டிஜிட்டல் திறன் உயர் கல்விகளை வழங்கி வருகிறது சென்னை வடபழனி, தோஷி கார்டனில் இயங்கிவரும் ஐ.டி.கே. எஜுகேஷன் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம்.
இங்கு டிஜிட்டல் கல்வி பயின்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மிகப்பெரிய நிறுவனங்களில் பணியாற்றுவதுடன், தொழில்முனைவோராகவும் திகழ்கின்றனர். ஐ.டி.கே. எஜுகேஷன் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தனது பயணத்தின் மீண்டும் ஒரு மைல் கல்லாக, தமிழக மற்றும் இந்திய மாணவர்களுக்கு சர்வதேச தரக் கல்வியை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
மலேசியா நாட்டில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்கள், ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள் மற்றும் பிரபல கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை படிப்புக்கள், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள், முனைவர் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை தமிழக மாணவர்கள் மட்டுமின்றி இந்திய மாணவர்கள் மிக குறைந்த கட்டணத்தில் கல்வி கற்கும்வகையில் மலேசிய அரசின் அங்கீகாரம் பெற்ற ஸ்டடி மலேசியா நிறுவனத்துடன் ஐ.டி.கே. எஜுகேஷன் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
நிகழ்ச்சியில் ஸ்டெடி மலேசியா நிறுவன தலைவர் ஜி.எஸ்.திருவும், ஐ.டி.கே. எஜுகேஷன் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன தலைவர் டாக்டர் ஜோசப் மாணிக்கராஜும் ‘மலேசியாவில் சர்வதேச கல்வித்திட்ட’ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, இருவரும் பரிமாறிக்கொண்டனர். ஸ்டெடி மலேசியா நிறுவன செயல் அதிகாரி ஸ்ரீகாந்த் ஜெய்பால் உடனிருந்தார்.
இதையும் படியுங்கள்: தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மூத்த கல்வியாளரும், விநாயகா மிஷன் பல்கலைக்கழக ரிசர்ச் பவுண்டேசன் டீன் டாக்டர் ஆர். மார்த்தா கிரிஸில்டா வாழ்த்தி பேசினார்.
நிகழ்ச்சியில் பேசிய ஐ.டி.கே. எஜுகேஷன் சர்வீஸ் தலைவர் டாக்டர் ஜோசப் மாணிக்கராஜ், மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையினை மையப்படுத்தும் வகையில் தனது நிறுவனம் சார்பில், ஐ.டி.கே. குளோபல் ஸ்டடி டிவிசன் துவங்கப்பட்டு, தமிழக மாணவர்கள் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மாணவர்களும் சர்வதேச தர உயர் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்டெடி மலேசியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருப்பதாக குறிப்பிட்டார்.
இதன்மூலம் மலேசிய உயர் கல்வி அமைச்சகம் மற்றும் சுற்றுலா வளர்ச்சித்துறை ஒப்புதலோடு, நாங்கள் இந்திய மாணவர்களுக்கு சர்வதேச தரத்தில் உயர்கல்வி, குறுகிய மற்றும் நீண்டகால கல்வி, பிரபல தொழிற்சாலைகளில் தொழிற்பயிற்சி மற்றும் விசா ஏற்பாடுகள் என மாணவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுப்போம் என்று டாக்டர் ஜோசப் மாணிக்கராஜ் தெரிவித்தார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஐ.டி.கே. எஜுகேஷன் சர்வீஸ் நிறுவன அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.