Home News புதுவை மாநில ஐ.என்.டி.யூ.சி. மாநில செயற்குழு கூட்டம் – பட்ஜெடை எதிர்த்து பல தீர்மானங்கள்

புதுவை மாநில ஐ.என்.டி.யூ.சி. மாநில செயற்குழு கூட்டம் – பட்ஜெடை எதிர்த்து பல தீர்மானங்கள்

0
புதுவை மாநில ஐ.என்.டி.யூ.சி.  மாநில செயற்குழு கூட்டம் – பட்ஜெடை  எதிர்த்து  பல தீர்மானங்கள்
  • பட்ஜெட்டில் பி.ஆர்.டி.சி., காண்பெட் தொழிலாளர்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

  • மத்திய அரசு அழுத்தம் காரணமாக புதுவையில் ஏழை, எளிய நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும் பிரீபெய்டு மின்மீட்டர் பொருத்தும் திட்டத்த்திற்கு எதிர்ப்பு 

புதுவை, பிப் 16

புதுவை மாநில ஐ .என்.டி.யூ.சி.தலைமை அலுவலகத்தில் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. ஐ.என்.டி.யூ.சி. தலைவர் பாலாஜி தலைமை வகித்தார்.

மாநில நிர்வாகிகள் சொக்கலிங்கம், நரசிங்கம், ஞானசேகரன், முத்துராமன், தமிழ்செல்வன், கணேஷ்குமார், சபரி, பன்னீர், குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படியுங்கள்வெளிநாடுகளிலிருந்து முதலீடுகளை பெறுமா கைலாசா ?- திட்டங்களை தீட்டும் நித்தியானந்தா

கூட்டத்தில், வருகிற 22, 23-ந் தேதி புதுடெல்லி யில் நடைபெறும் ஐ.என்.டி.யூ.சி. தேசிய மாநாடு, தேசிய தலைவர் தேர்தலில் மாநில தலைவர் பாலாஜி தலைமையில் 25 பிரதிநிதிகள் பங்கேற்பது. மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தொழிலாளர்கள், விவசாயிகள், ஏழைகளை பற்றி கவலைப்படாமல் கார்ப்பரேட் முதலாளிகளுக்காக தயாரிக்கப்பட்ட தொழிலாளர் விரோத பட்ஜெட்டை கண்டிப்பது. மத்திய அரசு அழுத்தம் காரணமாக புதுவையில் ஏழை, எளிய நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும் பிரீபெய்டு மின்மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். மத்திய, மாநில அரசு ஊழியர்கள் நலன் தொடர்பான உத்தரவுகளை நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும்.

பட்ஜெட்டில் பி.ஆர்.டி.சி., காண்பெட் தொழிலாளர்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.