Home செய்திகள் அமெரிக்க வணிக மற்றும் சுற்றுலா விசாவில் வேலைக்கும் விண்ணப்பிக்கலாம்

அமெரிக்க வணிக மற்றும் சுற்றுலா விசாவில் வேலைக்கும் விண்ணப்பிக்கலாம்

0
அமெரிக்க வணிக மற்றும் சுற்றுலா விசாவில் வேலைக்கும் விண்ணப்பிக்கலாம்
american visa

(apply for job is allowed in american business ,tourist visa)

வாஷிங்டன், மார்ச் 23

எச்1பி விசா

h1b visa
h1b visa

அமெரிக்காவுக்கு செல்லும் வெளிநாட்டவர்களுக்கு பல்வேறு விசாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் எச்1பி விசாவில் இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

மேலும் சுற்றுலா விசா, வணிக விசாவில் ஏராளமானோர் அமெரிக்காவுக்கு சென்று வருகிறார்கள். இவர்கள் குறிப்பிட்ட காலம் வரைதான் அங்கு இருக்க முடியும். இதே போன்ற விசாவில் அமெரிக்காவுக்கு செல்பவர்கள் பணிபுரிய அனுமதி இல்லாமல் இருந்தது.

இதையும் படியுங்கள்ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றம்

வணிக மற்றும் சுற்றுலா விசா

இந்நிலையில் அமெரிக்க விசாவில் புதிய நடைமுறை கொண்டு வரப்படுகிறது. வணிக மற்றும் சுற்றுலா விசாவில் அமெரிக்காவுக்கு பயணிக்கும் தனிநபர், வேலைகளுக்கு விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.