Home செய்திகள் 1 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் ஜூன் 7  திறப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ்

1 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் ஜூன் 7  திறப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ்

0
1 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் ஜூன் 7  திறப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ்
Caste, income and location certificates will be issued to students in government schools - Minister Anbil Mahes

 

1 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் ஜூன் 7  திறப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ்

june 7 school opens for 1 st to 12th – minister anbil mahesh

  • கோடை வெயிலின் தாக்கம் பல மாவட்டங்களில் அதிகம் இருப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றி அமைக்க அரசு முடிவு

  • முதலமைச்சரின் ஆலோசனையின் அடிப்படையில் கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் ஜூன் 7-ந்தேதி பள்ளிகள் திறப்பு

சென்னை, மே..26

பள்ளிக்கூடங்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டது.

பள்ளிகள் திறக்கும் தேதி

இந்த நிலையில் வருகிற கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும் என்பதை பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 5-ந் தேதியும், 6 முதல் பிளஸ்-2 வரையான வகுப்புகளுக்கு ஜூன் 1-ந் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது கோடை வெயிலின் தாக்கம் பல மாவட்டங்களில் அதிகம் இருப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

directorate of school education
directorate of school education

இதையும் படியுங்கள்பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு மீண்டும் ஒத்தி வைப்பு 

கோடை வெயில் அதிகம்

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:- தற்போது கோடை வெயில் அதிகமாக தெரிவதால் பள்ளிக்கூடங்கள் திறப்பதை மாற்றி அமைக்க ஆலோசனை நடத்தினோம். ஜூன் 5 அல்லது 7 ஆகிய தேதிகளில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

முதலமைச்சரிடம் ஆலோசனை

இது தொடர்பாக முதலமைச்சரிடம் ஆலோசனை கேட்கப்பட்டது.  முதலமைச்சரின் ஆலோசனையின் அடிப்படையில் கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் ஜூன் 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.