
kanchipuram firecrackers godown accident: 5 lakhs each to the victim families
காஞ்சிபுரம், மார்ச். 22
காஞ்சிபுரம் அடுத்த குருவி மலையில் சிறிய அளவில் பட்டாசு தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு தயாரிக்கும் ஆலையில் சிறிய ரக பட்டாசுகள் மற்றும் வான வேடிக்கைகள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று 12:00 மணி அளவில் குடோனுக்கு வெளியே காய வைக்கப்பட்டு இருந்த பட்டாசின் மூலப்பொருள் மூலப் பொருட்கள் திடீரென தீப்பற்றி எறிய துவங்கி உள்ளது.
இந்த தீ வேகமாக பரவி பட்டாசு தயாரிக்கும் ஆலை குடோன் பகுதியிலும் பரவியது. இந்த தீ விபத்து நடைபெற்ற பொழுது, குடோன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 25க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த நிலையில் திடீரென தீப்பற்றி எரிந்த பட்டாசு குடோனில் பலத்த சத்தத்துடன் சிறிய நில அதிர்வை அப்பகுதி மக்கள் உணர்ந்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கு : தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு
இதனை அடுத்து பதறி அடித்து அப்பகுதிக்கு ஓடிச் சென்ற மக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். மேலும் காஞ்சிபுரம் தீயணைப்பு துறை எனக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்த, இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
காஞ்சிபுரம் அருகே இன்று பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் பலியாகினர். 12 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவி தொகை
இந்த சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலையின் உரிமையாளரான நரேந்திரன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன், தலா ரூ.3 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்க உத்தரவிட்டிருந்தார்.
பிரதமர் மோடி உதவி தொகை
இதேபோல் காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.