
கர்நாடக சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி (ஏப்ரல் 25, 26) பிரச்சாரம்
karnataka election: congress leader priyanka gandhi to campaign in poll bound on apr.25,26
-
அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரம்
-
கவுரிசங்கர் கன்வென்ஷன் ஹாலில் மாலை 3 மணி முதல் மகளிர் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.
பெங்களூரு, ஏப். 24
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் (மே) 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அங்கு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி (ஏப்ரல் 25, 26) நாளையும், நாளை மறுநாளும் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இதற்காக நாளை அவர் கர்நாடகத்திற்கு செல்ல உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : மாவட்டத்தில் 3 சிறந்த பள்ளிகளுக்கு சுழற்கேடயங்கள் – தொடக்ககல்வி இயக்குநர்
அங்குள்ள தி.நரசிபுரத்தில் உள்ள கெலவரகண்டியில் நாளை (செவ்வாய்க்கிழமை) மதியம் 1 மணி வரை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசுகிறார். அதனை தொடர்ந்து சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூரில் உள்ள கவுரிசங்கர் கன்வென்ஷன் ஹாலில் மாலை 3 மணி முதல் மகளிர் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.
ராகுல் காந்தியும் 2 நாள் சுற்றுப்பயணமாக கர்நாடகத்திற்குச் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.