சியோலில் கொரியாவாழ் வெளிநாட்டினரின் ஒரு நாள் சூப்பர் சிக்ஸர் கிரிக்கெட் போட்டி : ஜெ.சி.சி. அணி சாம்பியன்
Korean Overseas One Day Super Sixers Cricket Tournament in Seoul: JCC Team champion
சியோல், அக். 07
தென் கொரியா தலைநகர் சியோலில் உள்ள செஜாங் பல்கலைக்கழக மைதானத்தில் கொரியாவாழ் வெளிநாட்டினர் பங்கேற்ற ஒரு நாள் சூப்பர் சிக்ஸர் கிரிக்கெட் போட்டி நேற்று (06.10.2024) நடைபெற்றது.
செஜாங்-சைனி ஸ்டார்ஸ் கிரிக்கெட் கிளப் (SSCC) மற்றும் கேலக்ஸி கிரிக்கெட் கோப்பை அமைப்பின் முதல் ஆண்டுக்கான இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.
இந்த ஒருநாள் சூப்பர் சிக்ஸர் கிரிக்கெட் போட்டியில் 14 அணிகள் மோதின.
அரையிறுதிப் போட்டிக்கு செஜாங் சூப்பர் கிங்ஸ், ஜேசிசி, கொரியன் கொம்பன்ஸ் மற்றும் பூசன் பீனிக்ஸ் அணிகள் தேர்வுபெற்றன.
இறுதிப் போட்டியில், பூசான் பீனிக்ஸ் அணியும், ஜே.சி.சி. அணியும் களம்கண்டன. இதில் ஜே.சி.சி. அணி அபாரமாக விளையாடி சாம்பியன் கோப்பையை தட்டிச்சென்றது.
போட்டியை ஏராளமான கொரியாவாழ் வெளிநாட்டு ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பி கண்டு ரசித்தனர்.
முன்னதாக, இப்போட்டிக்கான மைதான ஏற்பாடுகளை செஜாங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் ஆரோக்கியராஜ் மற்றும் முனைவர் பாலா ஆகியோர் செய்திருந்தனர்.
சைனி ஸ்டார்ஸ் குழுவின் உறுப்பினர்களான ஹேமநாதன், சாமிராஜன், சகாய டர்சியூஸ், குஷால், ராகுல், சேத்தன், சுபம், சந்தோஷ் பட்டேல், துரைபாபு, வெங்கடேஷ், கவி குமார், பாரிவேந்தன் மற்றும் முகமது ரபீக் ஆகியோரும் போட்டி ஏற்பாட்டில் பெரும் பங்குவகித்தனர்.
சென்னை மன்னா இந்திய உணவகம், தென் கொரிய தமிழ் ஆராய்ச்சி அமைப்பு (SKTRA), சைனி ஸ்டார்ஸ் மூத்த உறுப்பினர்கள், பொறியாளர் பிரான்சிஸ் மற்றும் முனைவர் சிவா ஆகியோர் இந்த கிரிக்கெட் போட்டிக்கு நிதி உதவி அழித்திருந்தனர்.
தென் கொரியாவாழ் அனைத்து சமூகத்தினரிடையே இந்த கிரிக்கெட் போட்டி, மிகுந்த ஆர்வத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது குறிப்பிட்டத்தக்கது.