Home News கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தை மேம்படுத்த ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு

கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தை மேம்படுத்த ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு

0
கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தை மேம்படுத்த ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு
  • கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தை மேம்படுத்துதல் தொடர்பாக சென்னை மாநகராட்சி, சென்னை காவல் மற்றும் சென்னைப் பெரு நகர வளர்ச்சிக் குழும அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம்.

  • ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், வளாகத்தில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள், வளாகத்தில் அமைந்து உள்ள புறக்காவல் நிலையத்தை சீரமைத்தல் மற்றும் தனி காவல் நிலையம் அமைத்திட நடவடிக்கை

சென்னை, பிப்.04

சென்னை பெருநகர மையப்பகுதியில் வியாபார நிமித்தத்தால் ஏற்படும் நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் கோயம்பேடு மொத்த அங்காடி வளாகம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இவ்வளாகத்தில் காய்கறிகள், பழங்கள், மலர்கள், உணவு தானியங்கள் விற்பனைக்காக 3,941 கடைகள் அமைக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருகை தந்து பயன்பெற்று வருகின்றனர்.

இவ்வளாகத்தினை நவீனப்படுத்தி, மேம்படுத்திட சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ரூ. 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் தலைவருமான பி.கே. சேகர்பாபு தலைமையில், நேற்று கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தை மேம்படுத்துதல் தொடர்பாக சென்னை மாநகராட்சி, சென்னை காவல் மற்றும் சென்னைப் பெரு நகர வளர்ச்சிக் குழும அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதையும் படியுங்கள் : அமெரிக்க பென்டகன் மீது ரகசிய பலூன் : உளவு பார்க்கவில்லை சீனா மறுப்பு

இக்கூட்டத்தில் கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தினை மேம்படுத்திடும் வகையில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை நவீனமயமாக்குதல், போக்குவரத்து நெரிசல் மற்றும் இடையூறினை களைந்து, சீரான போக்கு வரத்திற்கு உரிய ஏற்பாடுகளை செய்தல், வளாகப் பகுதியில் உலவிடும் கால்நடைகளால் ஏற்படும் பிரச்சினைகளை சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சரிசெய்தல்.

ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், வளாகத்தில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறை அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்துதல், வளாகத்தில் அமைந்து உள்ள புறக்காவல் நிலையத்தை சீரமைத்தல் மற்றும் தனி காவல் நிலையம் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்றவை குறித்து விரிவாக கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் அபூர்வா, சென்னை கமிஷனர் சங்கர் ஷிவால், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, கூடுதல் காவல் ஆணையர் டி.எஸ். அன்பு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.