Home செய்திகள் சென்னை “லேக் வியூ” அப்பார்ட்மெண்டில் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட சொகுசு கார்கள் | வைரல் வீடியோ

சென்னை “லேக் வியூ” அப்பார்ட்மெண்டில் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட சொகுசு கார்கள் | வைரல் வீடியோ

0
சென்னை “லேக் வியூ” அப்பார்ட்மெண்டில் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட சொகுசு கார்கள் | வைரல் வீடியோ
Luxury cars swept away in Chennai "Lake View" apartment | Viral video

சென்னை “லேக் வியூ” அப்பார்ட்மெண்டில் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட சொகுசு கார்கள் | வைரல் வீடியோ

Luxury cars swept away in Chennai “Lake View” apartment | Viral video

  • வளசரவாக்கம் 203.1, மலர் காலனி 194.7, பெருங்குடி 189.3, கோடம்பாக்கம் 179.4, சோழிங்கநல்லூர் 177.3, அடையார் 166.5, புழல் 165, பெருங்குடி 160.2, கொளத்தூர் 157.2, அம்பத்தூர் 152.4, தேனாம்பேட்டை 145.5, திரு.வி.கே நகர் 143.1, முகலிவாக்கம் 142.2, ஐஸ் ஹவுஸ் 141.6, அண்ணாநகர் 140.4 செமீ மழை என மழை அளவு பதிவு

  • மழை வெள்ளத்தால் மோங்க் ஏரி கரை உடைந்து அபார்ட்மென்டுக்குள் நுழைந்தது. இதில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த உயர் ரக ஆடம்பர கார்களை வெள்ள நீர் இழுத்து சென்றது. 

சென்னை, டிச. 04

சென்னை “லேக் வியூ” அப்பார்ட்மெண்டில் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட சொகுசு கார்கள் : சென்னையில் பிரபல அபார்ட்மெண்ட் ஒன்றில் கார் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டு இருந்த கார்களை மழை வெள்ளம் இழுத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் கால்வாய்கள் நிரம்பி வழிகின்றன . மழை நீர் வடிகால் அமைப்புகள் இருந்தும் கூட பல இடங்களில் தண்ணீர் வெளியேறும் வழி இல்லாமல் உள்ளது. தண்ணீர் எதிர்த்து வரக்கூடாது என்பதற்காக வடிகால்கள் மூடப்பட்டு உள்ளன.

இப்போதைக்கு சாலைகளில் தேங்கி உள்ள தண்ணீர் வெளியேறும் வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. சாலைகளில் ஓடும் தண்ணீர் அளவு நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருகிறது.

Mikjam storm : Dec 4 public holiday for Chennai, Thiruvallur, Kanchi, Sengalpet districts
Mikjam storm :

சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது. அதிகாலை 6 மணி முதல் இடைவிடாமல் மழை பெய்தது. ஆனாலும் அங்கு தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது.

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்கள், அடையாறு ஆறு, ஏரிகள் ஆகிய இடங்களில் மேயர் ப்ரியா பார்வையிட்டார். அம்பத்தூர், கொரட்டூர், ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம், திருநின்றவூர் பகுதிகளில் விடாமல் மிக கனமழை பெய்து வருகிறது.

இதையும் படியுங்கள்: தமிழ்நாட்டை தாக்க வரும் மிக்ஜம் புயல் : சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வளசரவாக்கம் 203.1, மலர் காலனி 194.7, பெருங்குடி 189.3, கோடம்பாக்கம் 179.4, சோழிங்கநல்லூர் 177.3, அடையார் 166.5, புழல் 165, பெருங்குடி 160.2, கொளத்தூர் 157.2, அம்பத்தூர் 152.4, தேனாம்பேட்டை 145.5, திரு.வி.கே நகர் 143.1, முகலிவாக்கம் 142.2, ஐஸ் ஹவுஸ் 141.6, அண்ணாநகர் 140.4 செமீ மழை என மழை அளவு பதிவாகியுள்ளது.

சென்னையில் உள்ள பிரபல அபார்ட்மெண்ட் ஒன்றில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டு இருந்த கார்களை மழை வெள்ளம் அடித்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பள்ளிக்கரணை அருகே சிட்டிபாபு நகரை ஒட்டி மோங்க் லேக் என்ற ஏரிக்கு அருகே அபார்ட்மெண்ட் ஒன்று உள்ளது.

மழை வெள்ளத்தால் மோங்க் ஏரி கரை உடைந்து அபார்ட்மென்டுக்குள் நுழைந்தது. இதில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த உயர் ரக ஆடம்பர கார்களை வெள்ள நீர் இழுத்து சென்றது. இந்த காட்சியை மாடியில் இருந்து படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சென்னை நகரம் 2015 க்கு பிறகு மீண்டும் ஒரு வெள்ள பெருக்கை சந்தித்துள்ளது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.