Home செய்திகள் இறந்து போன வீட்டு உரிமையாளரின் காரை போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்த வேலைக்கார பெண் கைது

இறந்து போன வீட்டு உரிமையாளரின் காரை போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்த வேலைக்கார பெண் கைது

0
இறந்து போன வீட்டு உரிமையாளரின் காரை போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்த வேலைக்கார பெண் கைது
Maid woman arrested for selling car of dead house owner with fake documents

இறந்து போன வீட்டு உரிமையாளரின் காரை போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்த வேலைக்கார பெண் கைது

Maid woman arrested for selling car of dead house owner with fake documents

Maid woman arrested for selling car of dead house owner with fake documents
Maid woman arrested for selling car of dead house owner with fake documents

சென்னை, நவ. 08
இறந்து போன வீட்டு உரிமையாளரின் காரை போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்த வேலைக்கார பெண் கைது: சென்னையில் இறந்து போன வீட்டு உரிமையாளரின் காரை போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்த வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை சாந்தோமில் வாசித்து வந்தவர் மூத்த வழக்கறிஞர் டி.எல்.ராஜா. இவர் தமிழக டி.ஜி.பி.யின் சட்ட ஆலோசகராக பணியாற்றியவர். டி.எல். ராஜாவின் மனைவி பத்மாவதி. இவர் கடந்த 2015 -ல் இறந்து விட்டார்.

வழக்கறிஞர் டி.எல்.ராஜா-பத்மாவதி தம்பதிக்கு கீர்த்தனா நாகலட்சுமி, கீர்த்திகா நாகலட்சுமி என்ற இரு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. வழக்கறிஞர் டி.எல்.ராஜாவுக்கு, சாந்தோம், ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் வீடுகளும், சொத்துக்களும் உள்ளன.

வழக்கறிஞர் டி.எல்.ராஜாவின் அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்து வந்தவர், கோவை ஆவாரம்பாளையம் செபா நகரை சேர்ந்த சாந்தகுமாரின் மனைவி பத்மா. கணவரை பிரித்து வாழ்ந்த பத்மா, வழக்கறிஞர் டி.எல்.ராஜாவின் வீட்டு வேலைகளையும் கவனித்து வந்துள்ளார்.

இதனிடையே வழக்கறிஞர் டி.எல்.ராஜா கடந்த 2022 ஆண்டு இறந்து விட்டார். அவரது வீட்டில் வேலை பார்த்த பத்மா, ஈஞ்சம்பாக்கம் ராயல் என்கேளவ் எக்ஸ்டென்சன் கலாக்குருதியில் உள்ள வழக்கறிஞர் டி.எல்.ராஜாவுக்கு சொந்தமான வீட்டை ஆக்கிரமித்து வசித்து வந்ததாகவும், அதனை தட்டி கேட்ட டி.எல்.ராஜாவின் மகள்கள் கீர்த்தனா நாகலட்சுமி மற்றும் கீர்த்திகா நாகலட்சுமி ஆகியோரை ரவுடிகளை ஏவி விட்டு கொலை செய்து விடுவதாக பத்மா மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து கீர்த்தனா நாகலட்சுமி மற்றும் கீர்த்திகா நாகலட்சுமி ஆகியோர் பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதனிடையே வழக்கறிஞர் டி.எல்.ராஜா பயன்படுத்தி வந்த TN 06V 1293 என்ற ஹோண்டா சிட்டி கார் மாயமானது. கார் காணாமல் போனது குறித்து கீர்த்தனா நாகலட்சுமி மற்றும் கீர்த்திகா நாகலட்சுமியும் பத்மாவிடம் கேட்கவே, அவர் மறுத்ததையடுத்து, முதல்-அமைச்சரின் தனிச்செயலரிடம் புகார் மனு அளித்தனர். அவரது பரிந்துரையின்படி நீலாங்கரை ஜே 8 காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருஞானம் வழக்கு பதிவு செய்து (FIR NO: 395/2023) விசாரணை நடத்தி வந்தார்.

இதையும் படியுங்கள் : கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 10 சதவீதம் தீபாவளி போனஸ் | தமிழக அரசு

இந்தநிலையில் காலமான வழக்கறிஞர் டி.எல்.ராஜாவின் செல்போனுக்கு, கார் வேறொருவருக்கு விற்பனை செய்யப்பட்டு, உரிமையாளர் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்த மெசேஜ் வந்துள்ளது. இந்த மெசேஜை வைத்து விசாரணையை முடுக்கி விட்ட போலீசார், காணாமல் போன காரை கோவையை சேர்ந்த ஹரி என்பவர் வாங்கியது தெரியவந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில் 2023 ம் ஆண்டு வழக்கறிஞர் டி.எல்.ராஜா காரை விற்ற ஆவணத்தை ஹரி காட்டி உள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு இறந்துபோன வழக்கறிஞர் டி.எல்.ராஜா, 2023 ம் ஆண்டு எப்படி வந்து கையெழுத்து போட்டு காரை விற்பனை செய்தார் என போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

Maid woman arrested for selling car of dead house owner with fake documents
Maid woman arrested for selling car of dead house owner with fake documents

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டில் வேலை பார்த்த பத்மா தான், வழக்கறிஞர் டி.எல்.ராஜாவை போன்று மோசடியாக போலி கையெழுத்து போட்டு காரை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. பத்மாவுக்கு உடந்தையாக கோவை ஆவாரம்பாளையம் ரவிச்சந்திரன் மற்றும் வெண்ணிலா ஆகியோர் கும்பலாக செயல்பட்டு இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து பத்மாவை கைது செய்த போலீசார், ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவான ரவிச்சந்திரன் மற்றும் வெண்ணிலா ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.