
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாட்ஸ் அப்பில் மிரட்டல் |முன்னாள் பாஜக நிர்வாகி கைது
Minister Udayanidhi Stalin threatened on WhatsAPP | Former BJP executive arrested
-
எட்வர்ட் ராஜதுரை அட்மினாக இருக்கும் வாட்ஸ் அப் குழு ஒன்றில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும், திட்டி விமர்சித்து ஆடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது.
-
சாத்தான்குளம் போலீசார் 294 (B), 153, 504, 505 உள்ளிட்ட ஒருவரை திட்டுதல், அரசுக்கு எதிராக களங்கம் விளைவிக்கும் விதமாக கருத்துக்களை பரப்புதல், நிந்தித்தல், பேச்சில் ஒருவரை தரக்குறைவாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
திருநெல்வேலி, நவ. 23
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாட்ஸ் அப்பில் மிரட்டல் | முன்னாள் பாஜக நிர்வாகி கைது : தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாட்ஸ் அப்பில் மிரட்டல் விடுத்ததாக முன்னாள் பாஜக நிர்வாகியை சாத்தான்குளம் போலீசாரால் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காவல்துறையால் கைது செய்யப்பட்ட நபரின் பெயர் எட்வர்ட் ராஜதுரை, 47. இவர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மாணிக்கவாசபுரம் பகுதியை சேர்ந்தவர். இவர் பாஜக முன்னாள் சிறுபான்மை அணி நிர்வாகியாக இருந்தார்.
இதையும் படியுங்கள் : வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கு | வனக்காப்பாளர் நீதிமன்றத்தில் சரண்
இந்த நிலையில் எட்வர்ட் ராஜதுரை அட்மினாக இருக்கும் வாட்ஸ் அப் குழு ஒன்றில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும், திட்டி விமர்சித்து ஆடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆடியோ வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் சாத்தான்குளம் திமுக நகரத் துணைத் செயலாளர் வெள்ள பாண்டியன் (73) என்பவர் அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் 294 (B), 153, 504, 505 உள்ளிட்ட ஒருவரை திட்டுதல், அரசுக்கு எதிராக களங்கம் விளைவிக்கும் விதமாக கருத்துக்களை பரப்புதல், நிந்தித்தல், பேச்சில் ஒருவரை தரக்குறைவாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆடியோ வெளியிட்ட எட்வர்ட் ராஜதுரை என்பவரை சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் முத்து தலைமையிலான குற்றப்பிரிவு போலீஸ் எஸ்ஐ டேவிட் உள்ளிட்ட போலீசார் அவரை கைது செய்தனர்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.