
மதுரை அரசு பள்ளிகளில் நண்பேன்டா அறக்கட்டளை பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்
Nanbenda Foundation Plastic Eradication Awareness Campaign in Madurai Government Schools
மதுரை, ஜூலை. 04
மதுரையில் நண்பேன்டா அறக்கட்டளை சார்பில் அரசு பள்ளிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை நண்பேன்டா அறக்கட்டளை பல்வேறு சமூக மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து மதுரை கள்ளந்திரி மற்றும் குருத்தூர் அரசு நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் நண்பேன்டா அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நகழ்ச்சி நடத்தப்பட்டது.
பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் குறித்து பள்ளி மாணவ -மாணவியர்களிடயே விளக்கப்பட்டது.
தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் முயற்சியாக பள்ளி குழந்தைகளுக்கு நண்பேன்டா அறக்கட்டளை சார்பில் சில்வர் வாட்டர் பாட்டில்கள் வழங்கப்பட்டது. அவற்றை அறக்கட்டளை தலைவர் டெம்பிள் சிட்டி குமார், பொருளாளர் பார்த்திபன் மற்றும் நிர்வாகிகள் வழங்கினர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.