
ஜாதி அடிப்படையில் பதவி உயர்வு கூடாது ; பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு – உச்ச நீதி மன்றம் உத்தரவு
No promotion based on caste; Promotion on the basis of seniority – Supreme Court order
-
54 துறைகளில் பணியாற்றும் சுமார் 5 லட்சம் அரசு ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படும்
-
நிலைபாதிக்கப்படுபவர்கள் ஒருபுறம் இருக்க மறுபுறம் சீனியாரிட்டியில் பணி மூப்பு மூலம் பதவி உயர்வு கிடைக்கும் நம்பிக்கையில் பல அரசு ஊழியர்கள்
சென்னை, ஜூன்.12
தமிழக அரசு பணிகளில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு ஜாதியினரும் வேலையில் சேர்ந்த பிறகு அவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தாலும் இட ஒதுக்கீடு அடிப்படையிலும் பதவி உயர் வழங்கப்பட்டது. இந்த நடைமுறை 1990-ல் இருந்து பின்பற்றப்பட்டு வந்தது. சுழற்சி அடிப்படையிலான பதவி உயர்வில் (ரோஸ்டர் சிஸ்டம்) காலியிடங்கள் பதவி மூப்பு அடிப்படையில் நிரப்பப்படாமல் ஜாதி அடிப்படையில் சில பதவிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.
ஜாதி அடிப்படையில் சில பதவிகளுக்கு பதவி உயர்வு
இதன் மூலம் வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்து துறை, கணக்கு கருவூலம், வணிக வரித்துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட 54 துறைகளில் குரூப்-4 மூலம் பணியில் சேர்ந்த பலர் அதிக பலன் அடைந்து வந்தனர். இதன் பிறகு இந்த நடைமுறையை அதிக அளவில் செயல்படுத்தி வந்துள்ளனர். இதன் மூலம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 31 இடங்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 இடங்கள், தாழ்த்தப்பட்டோருக்கு 18 இடங்கள், பழங்குடியினருக்கு 1 இடம் மீதம் உள்ள இடங்களுக்கு பொது பிரிவு மூலம் பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறையால் பணி மூப்பு அடிப்படையில் சீனியாரிட்டி இருந்தும் பல பேருக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அரசு ஊழி யர்கள் அரசின் முடிவை எதிர்த்து 2004-ம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
ரோஸ்டர்சிஸ்டத்தில் பதவி உயர்வு
வழக்கை விசாரித்த ஐகோர்ட் ஜாதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவது சட்ட விரோதம், தமிழ்நாடு அரசு தேர்வாணைய விதிகளின்படி தான் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று 2015-ம் ஆண்டு தீர்ப்பு கூறியது. சுப்ரீம் கோர்ட்டும் இதை உறுதி செய்தது. ஆனாலும் கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தாமல் பழைய நடைமுறைப்படியே (ரோஸ்டர்சிஸ்டத்தில்) பதவி உயர்வுகள் நிரப்பப்பட்டு வந்தது.
இதையும் படியுங்கள் : பா.ஜனதா தமிழ்நாட்டுக்கு செய்த சிறப்பு என்ன ? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
இதனால் சுப்ரீம் கோர்ட்டில் 2021-ம் ஆண்டு மீண்டும் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில் ஜாதி அடிப்படையில் பதவி உயர்வு நிரப்ப கூடாது என்றும் பணி மூப்பு அடிப்படையில் தமிழ்நாடு அரசு தேர்வாணைய விதிகளை பின்பற்றி அரசுப் பணிகளில் பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும், அனைத்து நிலைகளிலும் சினியாரிட்டி லிஸ்டை சரியாக பின்பற்ற வேண்டும் என்றும் கோர்ட்டு இப்போது தெளிவுபடுத்தியது.
பணி மூப்பு அடிப்படையில் சீனியாரிட்டி பட்டியல்
இதன் அடிப்படையில் ரோஸ்டர் சிஸ்டத்தில் பதவி உயர்வு பெற்றவர்கள் இப்போது பதவி இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. அதிலும் குறிப்பாக வட்டார போக்குவரத்து துறை, ஊரக வளர்ச்சித் துறை, கணக்கு கருவூலத்துறை, வணிக வரித்துறை, காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை, வருவாய் உள்ளிட்ட 54 துறைகளில் பணியாற்றும் சுமார் 5 லட்சம் அரசு ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. ஒவ்வொரு அரசுத் துறையிலும் பணி மூப்பு அடிப்படையில் சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கும் பணி வேகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் பாதிக்கப்படுபவர்கள் ஒருபுறம் இருக்க மறுபுறம் சீனியாரிட்டியில் பணி மூப்பு மூலம் பதவி உயர்வு கிடைக்கும் நம்பிக்கையில் பல அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.