Home Blog Page 108

பிஞ்சு குழந்தைகளின் பிரியமான பஞ்சு மிட்டாயில் நஞ்சு -வஞ்சகர்கள் யார் ?

  • கொல்லம் பகுதியில் உள்ள பஞ்சு மிட்டாய் தயாரிப்பு நிறுவனத்தில் கேரள உணவு கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை 

  • பஞ்சு மிட்டாய் சாப்பிட்டால் உடலில் கல்லீரல் பாதிப்பு அல்லது புற்றுநோய் ஏற்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை

கொல்லம், பிப். 09

பள்ளி மற்றும் கோவில் விழாக்களில் அதிகம் விற்பனையாகும் மிட்டாய் வகைகளில் முக்கியமானது பஞ்சு மிட்டாய்.  தற்போது வீதிகளில்  அன்றாடம் கிடைகிறது இந்த  மிட்டாய். கேரளாவில் பஞ்சு மிட்டாய் அமோகமாக விற்பனை ஆகி வருகிறது.

இதனை வாங்கி உண்ட குழந்தைகள் சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இது தொடர்பாக கேரள மாநில உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் சென்றது.

அதன் அடிப்படையில் கொல்லம் பகுதியில் உள்ள பஞ்சு மிட்டாய் தயாரிப்பு நிறுவனத்தில் கேரள உணவு கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் பஞ்சு மிட்டாயில் நிறம் சேர்க்க ஆபத்தை ஏற்படுத்தும் ரசாயனம் கலந்திருப்பது தெரியவந்தது. இந்த வகை ரசாயனம் ஜவுளி ஆலைகளில் பயன்படுத்தும் ரோட்டமைன் வகை ரசாயனம் ஆகும்.

இதையும் படியுங்கள்மதுரை வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 15 தேதி வரை ரத்து

இதனை சாப்பிட்டால் உடலில் கல்லீரல் பாதிப்பு அல்லது புற்றுநோய் ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து கொல்லத்தில் செயல்பட்டு வந்த பஞ்சு மிட்டாய் ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மேலும் அங்கு தயாரிக்கப்பட்ட பஞ்சு மிட்டாய்களை பறிமுதல் செய்து உணவு தரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்துக்கு அனுப்பினர். இது தொடர்பாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது:-

கேரளாவில் உணவு பொருட்களில் கலப்படம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொல்லத்தில் உள்ள பஞ்சு மிட்டாய் நிறுவனத்தில் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய் தயாரித்தது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக அங்கு பறிமுதல் செய்யப்பட்ட மிட்டாய் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்ததும் இதில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.

மதுரை வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 15 தேதி வரை ரத்து

 

  • திருச்செந்தூர்-பாலக்காடு, மதுரை-ராமேசுவரம், மதுரை-திண்டுக்கல், நெல்லை-ஜாம் நகர், நெல்லை-காந்திதாம், நெல்லை-தாதர் ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இரு மார்க்கங்களிலும் வருகிற 15-ந் தேதி வரை ரத்து

  • தேனியில் இருந்து தினந்தோறும் இரவு 6.15 மணிக்கு புறப்படும் ரெயில் வருகிற 14-ந் தேதி வரை அரைமணி நேரம் தாமதமாக 6.45 மணிக்கு புறப்பட்டு வரும்.

மதுரை, பிப் .09

மதுரை-திருமங்கலம் இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. எனவே அந்த வழியாக செல்லும் ரெயில்கள் போக்குவரத்தில் வருகிற 15-ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி திருச்செந்தூர்-பாலக்காடு, மதுரை-ராமேசுவரம், மதுரை-திண்டுக்கல், நெல்லை-ஜாம் நகர், நெல்லை-காந்திதாம், நெல்லை-தாதர் ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இரு மார்க்கங்களிலும் வருகிற 15-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

தேனியில் இருந்து இரவு 6.15 மணிக்கு புறப்பட்டு வரும் மதுரை பயணிகள் ரெயில், 15-ந் தேதி ரத்து செய்யப்படும். மதுரை-திருவனந்தபுரம் (அமிர்தா), மதுரை-கோவை, மதுரை-விழுப்புரம் ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற 15-ந் தேதி வரை திண்டுக்கல்லில் இருந்து இயக்கப்படும்.

நாகர்கோவில்-கோவை, மதுரை-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இரு மார்க்கங்களிலும் விருதுநகரில் இருந்து இயக்கப்படும். மதுரை-எழும்பூர் (தேஜாஸ்) எக்ஸ்பிரஸ் ரெயில் இரு மார்க்கங்களிலும் வியாழன் தவிர மற்ற நாட்களில் திருச்சியில் இருந்து இயக்கப்படும்.

மதுரை-பிகானீர் எக்ஸ்பிரஸ் இன்று (9-ந் தேதி) கூடல்நகரில் இருந்து புறப்படும். கச்சிகுடா-மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 11-ந் தேதி திண்டுக்கல் வரை இயக்கப்படும். மதுரையில் இருந்து 12-ந் தேதி புறப்பட வேண்டிய கச்சிகுடா எக்ஸ்பிரஸ், திண்டுக்கல்லில் இருந்து இயக்கப்படும்.

இதையும் படியுங்கள்ஆந்திராவில் விஷ வாயு தாக்கி 7 பேர் உயிரிழப்பு

மதுரை-சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரெயில் இரு மார்க்கங்களிலும் ஈரோடு வரை இயக்கப்படும். பனாரஸ்-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் வருகிற 12-ந் தேதி விழுப்புரம் வரை இயக்கப்படும். ராமேசுவரத்தில் இருந்து வருகிற 15-ந் தேதி புறப்பட வேண்டிய பனாரஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரத்தில் இருந்து புறப்படும்.

செங்கோட்டை-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்லும். இது மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, பட்டுக்கோட்டையில் நின்று செல்லும். குருவாயூர்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக செல்லும். இது மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, பட்டுக்கோட்டையில் நின்று செல்லும்.

நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்லும். இது மானாமதுரையில் மட்டும் நின்று செல்லும். நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக செல்லும். மானாமதுரையில் மட்டும் நிற்கும்.

தேனியில் இருந்து தினந்தோறும் இரவு 6.15 மணிக்கு புறப்படும் ரெயில் வருகிற 14-ந் தேதி வரை அரைமணி நேரம் தாமதமாக 6.45 மணிக்கு புறப்பட்டு வரும். திருச்சியில் இருந்து வரும் பயணிகள் ரெயில், வருகிற 15-ந் தேதி வரை அரைமணி நேரம் தாமதமாக மானாமதுரைக்கு வரும்.

இந்த தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.

 

 

ஆந்திராவில் விஷ வாயு தாக்கி 7 பேர் உயிரிழப்பு

  • எண்ணெய் ஆலை உரிமையாளர் அம்பாண்டி சுப்பண்ணாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • டேங்கரை 9 பேர் சுத்தம் செய்த நிலையில், 7 பேர் மூச்சு திணறி உயிரிழந்துள்ளனர்.

காக்கிநாடா, பிப் .09

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே விஷ வாயு தாக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எண்ணெய் தொழிற்சாலையில் டேங்கரை சுத்தம் செய்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.

டேங்கரை 9 பேர் சுத்தம் செய்த நிலையில், 7 பேர் மூச்சு திணறி உயிரிழந்துள்ளனர். டேங்கரில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு தொழிலாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நேரில் பார்வையிட்டனர். மேலும், எண்ணெய் ஆலை உரிமையாளர் அம்பாண்டி சுப்பண்ணாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.

 

 

16-வது ஆசிய கோப்பை போட்டி பாகிஸ்தானிலா ? இந்தியாவிலா ? இலங்கையிலா ?

  • போட்டி நடக்கும் இடம் குறித்து அடுத்த மாதம் மீண்டும் விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.
  • இந்த போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய்ஷா அறிவித்தார்.

சென்னை, பிப். 07

ஆறு அணிகள் பங்கேற்கும் 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது.

ஆனால் இரு நாட்டு உறவு சீராக இல்லாததால் இந்திய அணியால் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட முடியாது. அதற்கு பதிலாக இந்த போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய்ஷா அறிவித்தார்.

இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து இது குறித்து விவாதித்து முடிவு எடுக்க பக்ரைனில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.

பாகிஸ்தானுக்கு சென்று விளையாட வாய்ப்பில்லை என்று இந்தியாவும், தங்கள் நாட்டில் தான் ஆசிய கோப்பை போட்டியை நடத்தியாக வேண்டும் என்பதில் பாகிஸ்தானும் விடாப்பிடியாக இருந்ததால் கூட்டத்தில் எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை.

இதையும் படியுங்கள் : நர்ஸ் விவகாரம் ; மன்னிப்பு கேட்ட நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா

போட்டி நடக்கும் இடம் குறித்து அடுத்த மாதம் மீண்டும் விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரை பாகிஸ்தான் புறக்கணிக்காது என இந்திய வீரர் அஷ்வின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- பாகிஸ்தானுக்கு நாம் செல்லாவிட்டால் அவர்கள் இந்தியாவுக்கு வரமாட்டோம் என்கிறார்கள். ஆனால் இப்படி நடப்பதை நாம் பலமுறை பார்த்திருப்போம்.

ஆசிய கோப்பை தொடரை அங்கு நடத்தக்கூடாது என நாம் சொல்லும் போது அவர்களும் நமது இடத்துக்கு வரமாட்டோம் என்று சொல்வார்கள். ஆனால் அது சாத்தியமில்லை என்று நான் நினைக்கிறேன். ஆசிய கோப்பை இலங்கைக்கு மாற்றப்படலாம்.

இது 50 ஓவர் உலகக்கோப்பைக்கு ஒரு முன்னிலையாக இருக்கலாம். துபாயில் பல தொடர்கள் நடைபெற்றுள்ளன. ஆசிய கோப்பை தொடர் இலங்கைக்கு மாற்றப்பட்டால் நான் மகிழ்ச்சி அடைவேன். இவ்வாறு அவர் கூறினார்.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.

 

 

 

நர்ஸ் விவகாரம் ; மன்னிப்பு கேட்ட நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா

  • எனக்கு சிகிச்சை அளித்த நர்ஸ் மிகவும் அழகாக இருந்ததால் அவரிடம் உண்மையை மறைக்க முடியவில்லை
  • கடுமையாக உழைத்தவர்கள் நீங்கள். உங்கள் மனது புண்படும்படி பேசி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

ஹைதெராபாத்,பிப். 07

ஆந்திராவின் பிரபல நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவர் தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ வாக இருந்தவர்.

தனியார் டிவி சேனல் நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராக நடிகர் பாலகிருஷ்ணா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் ஜனசேனா கட்சித் தலைவரும், பிரபல நடிகருமான பவன் கல்யாண் கலந்து கொண்டார்.

விவாத நிகழ்ச்சியின்போது பவன் கல்யாண் மகன் சாய் தரம் தேஜ் விபத்தில் சிக்கியது குறித்து பேசினார். அப்போது நடிகர் பாலகிருஷ்ணா தானும் கல்லூரியில் படிக்கும் போது விபத்தில் சிக்கி ரத்தம் கொட்டியதால் சிகிச்சைக்காக தனது நண்பர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அப்போது அவர்கள் விபத்தில் காயம் ஏற்படவில்லை, கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டதாக ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் கூற வேண்டும் என தெரிவித்தனர். ஆனால் எனக்கு சிகிச்சை அளித்த நர்ஸ் மிகவும் அழகாக இருந்ததால் அவரிடம் உண்மையை மறைக்க முடியவில்லை என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : ஆட்சேர்ப்புத் தேர்வுகளுக்கான வயது வரம்பில் தளர்வு-பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

அப்போது அவர் அழகை வர்ணித்து சில கருத்துகளை பேசியதாகவும் கூறப்படுகிறது. அவரது பேச்சுக்கு ஆந்திர மாநில நர்சுகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து, அவர் பேசிய பேச்சை வாபஸ் பெற வேண்டும். இல்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து நடிகர் பாலகிருஷ்ணா உடனடியாக மன்னிப்பு கேட்டார். இதுகுறித்து அவர் அந்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “எனது பேச்சை திரித்து சிலர் வேண்டுமென்றே சர்ச்சையை ஏற்படுத்தி விட்டனர். நர்சுகளின் சேவைகள் விலை மதிப்பற்றது. நர்சுகளை நான் என்னுடைய சகோதரிகளாக மதிக்கிறேன்.

பல உயிர்களை காப்பாற்றுவது நீங்கள் தான். கொரோனா காலகட்டத்தில் இரவு பகலாக உணவு, தண்ணீர் என்று பாராமல் கடுமையாக உழைத்தவர்கள் நீங்கள். உங்கள் மனது புண்படும்படி பேசி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.

 

 

ஆட்சேர்ப்புத் தேர்வுகளுக்கான வயது வரம்பில் தளர்வு-பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்வர்களின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதையும் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

  • குடிமைப் பணித் தேர்வர்களுக்கு கூடுதல் வாய்ப்பினை வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, இந்தியப் பிரதமர் மோடியை கேட்டுக்கொண்டு உள்ளார்.

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

குடிமைப்பணித் தேர்வுகள் உட்பட, ஒன்றிய அரசால் நடத்தப்பட்ட பல்வேறு ஆட்சேர்ப்புத் தேர்வுகளுக்கான வயது வரம்பை கொரோனா பெருந்தொற்றுக் காலங்களில் தவறவிட்ட தேர்வர்கள், ஒருமுறை நடவடிக்கையாக தங்களின் வயதுவரம்பை நீட்டிக்க வேண்டுமென்று கோரி வருவதைக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களது கோரிக்கையை கனிவுடன் பரிசீலிக்கக் கேட்டுக் கொண்டுள்ளதோடு, அனைத்து தேர்வர்களுக்கும் வயது தளர்வுடன் கூடுதல் முயற்சிக்கான வாய்ப்புகளை வழங்கிட நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளதைச் சுட்டிக்காட்டி உள்ளார்.

இதையும் படியுங்கள் : ஈரோடு இடைத்தேர்தல் : அ.தி.மு.க வை ஆதரிக்கிறது பாஜக – அண்ணாமலை அறிவிப்பு

மேலும், உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் இதுபோன்ற அறிவுரைகள் வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்வர்களின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதையும் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில், கொரோனா பெருந்தொற்றின் தாக்கங்களைக் கருத்தில் கொண்டு அரசுப்பணிகளுக்கான தேர்வுகளை எழுதுவோருக்கான வயது வரம்பை 2 ஆண்டுகள் தளர்த்தி அரசாணை வெளியிடப்பட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசும் ஒன்றியப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய சேமக் காவல் படைத் தேர்வுகளில், அனைத்துப் பிரிவினருக்கும், ஒரு முறை நடவடிக்கையாக, 3 ஆண்டுகள் வயது வரம்பைத் தளர்த்தி ஆணையிட்டுள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

தேர்வர்களுக்கு இத்தகைய ஒருமுறை தளர்வு வழங்குவதன் வாயிலாக, அரசுக்கு எவ்வித நிதிச்சுமை ஏற்படாது என்றும், இது குடிமைப் பணிச் சேவையில் சேர விரும்பும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பை வழங்கிடும் என்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கொரோனா பெருந்தொற்று பாதிப்பைக் கருத்தில் கொண்டு, குடிமைப் பணித் தேர்வர்களுக்கு கூடுதல் வாய்ப்பினை வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, இந்தியப் பிரதமர் மோடியை கேட்டுக்கொண்டு உள்ளார்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.

 

 

நில நடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கி சிரியாவுக்கு உலக நாடுகள் உதவி

0

அங்காரா, பிப். 07

நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியா நாட்டுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி உள்ளது. மீட்பு பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொண்டு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்து உள்ளார்.

இங்கிலாந்தில் இருந்து கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை துல்லியமாக கண்டுபிடிப்பதற்காக 76 பேரும் மீட்பு பணி நிபுணர்கள் 4 பேரும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

ஸ்பெயின், தீயணைப்பு படை வீரர்கள். உபகரணங்கள்.400 ரக ராணுவவிமானம், மற்றும் பணியாளர்களை அனுப்பி வைத்து உள்ளது. போலந்து நாடு 76 தீயணைப்பு வீரர்கள், மற்றும் நன்கு பயிற்சி பெற்ற மோப்பநாய்கள், நவீன கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக துருக்கியில் தற்காலிக ஆஸ்பத்திரி அமைத்து கொடுக்க இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்து உள்ளது.இஸ்ரேல் நாடு 150 என்ஜீனியர்கள் கொண்ட மீட்பு படை, மருத்துவ பணியாளர்கள், உதவி பொருட்களை அனுப்பி வைத்து உள்ளது.

இந்தியாவும் 2 கட்டமாக மீட்பு குழுவினரை இன்று துருக்கி அனுப்பியது. இதே போல ஐரோப்பிய யூனியன், ஜெர்மனி, இத்தாலி, கிரீஸ் உக்ரைன், போலந்து கத்தார், செர்பியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 45-க்கும் மேற்பட்ட நாடுகள் துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவி செய்துள்ளன.

ஈரோடு இடைத்தேர்தல் : அ.தி.மு.க வை ஆதரிக்கிறது பாஜக – அண்ணாமலை அறிவிப்பு

சென்னை, பிப். 07

பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக இரட்டை இலை சின்னத்திலே போட்டியிடும் கே.எஸ்.தென்னரசுவை பாரதிய ஜனதா கட்சி தனது முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக சட்டப்பூர்வ அ.தி.மு.க. வேட்பாளரை முன்நிறுத்தி இருக்கும் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், பொதுநலன் கருதி கூட்டணியின் நன்மை கருதி, தங்களது வேட்பாளரை வாபஸ் பெற்றிருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆளும் கட்சியின் அராஜகங்களை, ஊழல்களை அத்துமீறல்களை, மக்கள் விரோத போக்கை, கொடுத்த வாக்கில் எதையும் நிறைவேற்ற முடியாமல், திணறிக்கொண்டிருக்கும் தி.மு.க. அரசை, வீழ்த்துவதற்காக ஓரணியில் திரண்டிருக்கும், நாம் அனைவரும், அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவின் வெற்றிக்கு பாடுபட வேண்டும். குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும், கூட்டணியின் வெற்றிக்காக கடுமையாக பாடுபட வேண்டும்.

இந்த இடைத்தேர்தல் வெற்றி, வருங்கால தேர்தல் வெற்றிகளுக்கு வரவேற்பு கூறும்வண்ணம் அமைக்க, கண்ணுறக்கம் இல்லாமல் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ஆட்சியின் பலம், அதிகாரத்தின் பலம், அளவின்றி குவித்திருக்கும் பணபலம், என்று எத்தனை பலத்துடன் நம் எதிரி வந்தாலும், மக்கள் பலத்துடன், நாம் மனதார உழைக்க வேண்டும். இவ்வாறு பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.

 

 

சீன ஆன்லைன் சூதாட்ட, லோன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை

  • சூதாட்டம் மற்றும் கடன் செயலிகளை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

  • நாடுமுழுவதும் 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யவும், முடக்கவும் மத்திய அரசு நடவடிக்கை.

டெல்லி, பிப் .05

ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகள் மூலம் பலர் பாதிக்கப்பட்டும், சிலர் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர். இதனால் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகளை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

சிறுவர்கள் , இளைஞர்கள் , பெண்கள் இவர்களை குறி வைத்து ஆன்லைன்  சூதாட்ட செயலிகள் இயங்குகின்றன .இவை பெரும்பாலும் சீன செயலிகள். இதில் சிக்குபவர்கள் பணம் மரியாதை எல்லாவற்றையும் இழந்து தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள் . சமூகத்தின் சீர்கேடான இந்த செயலிகளில் இருந்து விடுவிக்க , தவிர்க்க மத்திய அரசு இவற்றை தடை செய்துள்ளது .

சாமானிய மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை ஏதொ  ஒரு பண தேவைக்காக லோன் கிடைக்குமா என தேடுகிறார்கள். இவர்கள் எளிதில் சிக்கி தவிப்பது இந்த ஆன்லைன் லோன் செயலிகளில், இருப்பதையும் இழந்து தவித்து வருகிறார்கள்.

மேலும், லோன் தேவைபடாதவரையும் தொடர்ந்து தொல்லை செய்து லோனை தந்து,  திருப்பி செலுத்த தாமதமாயின் மிக கொடூரமாக வசூல் செய்யும் இந்த ஆன்லைன் செயலிகள் பல உயிர்களை காவு வாங்கும் இந்த செயலியையும், நடை பிணமாக்கும்  ஆன்லைன் சூதாட்ட செயலிகளையும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் நாடுமுழுவதும் 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யவும், முடக்கவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. உடனடி மற்றும் அவசர நடவடிக்கையாக சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யும் பணி தொடங்கியுள்ளது

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.

தமிழகத்தில் ஜாதி வெறியை தூண்டுகிறது பிஜேபி ? தடுக்குமா திமுக அரசு – திருமாவளவன் கேள்வி

  • பா.ஜ.க., சங்க பரிவார் அமைப்புகள் வடமாநிலங்களைப் போல தமிழகத்திலும் சாதி, மத முரண்களை கூர்மையாக்கி அரசியல் செய்ய தொடங்கியிருக்கின்றன.

  • தி.மு.க. அரசுக்கு எதிராக குரல் எழுப்பும் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் வேங்கை வயல் சம்பவம் தொடர்பாக ஏன் கருத்து தெரிவிக்கவில்லை.

புதுக்கோட்டை, பிப் . 05

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமினை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தொடங்கி வைத்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது:- வேங்கை வயல் சம்பவத்தில் முதலில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை பாதிக்கப்பட்ட மக்கள் மீது குற்றம் சாட்டுவதாக சென்றது. அதன் பிறகு இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

இதையும் படியுங்கள் :11-ம் வகுப்பு பொதுத்தேர்வு: பெயர் பட்டியல் வெளியீடு; திருத்தம் செய்ய பிப். 10 கடைசி

இருந்த போதிலும் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாதது ஏமாற்றமும், அதிர்ச்சியும் அளிக்கிறது. யாராக இருந்தாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். தி.மு.க. அரசுக்கு எதிராக குரல் எழுப்பும் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் வேங்கை வயல் சம்பவம் தொடர்பாக ஏன் கருத்து தெரிவிக்கவில்லை.

பா.ஜ.க., சங்க பரிவார் அமைப்புகள் வடமாநிலங்களைப் போல தமிழகத்திலும் சாதி,மத முரண்களை கூர்மையாக்கி அரசியல் செய்ய தொடங்கியிருக்கின்றன. எனவே வேங்கை வயல் சம்பவத்தினை இந்த கோணத்திலும் விசாரிக்குமாறு தமிழக அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மேலும் வேங்கை வயல் சம்பவத்தை கண்டித்து திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என சீமான் கூறியுள்ளது தொடர்பாக கேட்டபோது, சமூகப் பிரச்சனைகளுடன் அரசியலை முடிச்சு போட தேவையில்லை என பதில் அளித்தார்.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.